அமைச்சராகும் நடிகை விஜயசாந்தி? விரைவில் வரும் குட்நியூஸ்.. காங்கிரஸ் கொடுக்கும் சூப்பர் கிப்ட்
ஹைதராபாத்: தெலங்கானாவில் நடிகை விஜயசாந்தி அமைச்சராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். அவர் தெலுங்கானாவில் எம்எல்சியாக உள்ள நிலையில் விரைவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி குட்நியூஸ் சொல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளளது.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். தெலுங்கானா அமைச்சரவையில் தற்போது 6 காலியிடங்கள் உள்ளன.

இந்த காலியிடங்களை நிரப்ப முதல்வர் ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இதற்கு அவர் கட்சி மேலிடத்திடம் ஒப்புதல் கேட்டு இருந்தார். இதையடுத்து தான் நேற்று முன்தினம் காங்கிரஸ் மேலிடம் தெலுங்கானா தலைவர்களை டெல்லிக்கு அழைத்தது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மாலு பட்டி விக்ரமரக்கா, நீ்ர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, காங்கிரஸ் மாநில தலைவர் மகேஷ் குமார் உள்ளிட்டவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் தான் யுகாதி பண்டிகை அல்லது அதற்கு அடுத்த சில தினங்களில் தெலுங்கானாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி நடிகை விஜயசாந்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது தெலுங்கானா அமைச்சரவையில் மொத்தம் 2 பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர். கொண்டா சுரேகா, சீதக்கா ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். இந்த வரிசையில் விஜயசாந்தியும் இடம்பெற லாபியை தொடங்கி உள்ளார்.
மேலும் அவருக்கு அமைச்சர் பதவி என்பது வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தெலுங்கானாவில் அமைச்சராக வேண்டும் என்றால் ஒருவர் எம்எல்ஏ அல்லது எம்எல்சியாக (சட்ட மேலவை)இருக்க வேண்டும். விஜயசாந்தி இந்த 2 பொறுப்பிலும் இல்லாமல் இருந்தார். ஆனால் சமீபத்தில் எம்எல்சி தேர்தல் நடந்தது.
இதில் காங்கிரஸ் மேலிடம் அனுமதியுடன் விஜயசாந்தி போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். மேலிடத்தின் ஆதரவு இருந்ததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக எம்எல்சி ஆனார். விஜயசாந்தியை அமைச்சராக்கும் முடிவில் தான் அவரை காங்கிரஸ் மேலிடம் எம்எல்சி ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கர்நாடகா துணை முதல்வரான டிகே சிவக்குமாரின் சப்போர்ட் விஜயசாந்திக்கு உள்ளது. இதனால் விஜயசாந்தி அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் விஜயசாந்தி அமைச்சராகும் பட்சத்தில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி பெண் அமைச்சர் கொண்டா சுரேகாவிடம் இருந்து பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பல மூத்த கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அக்கட்சியின் மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி மைனம்பல்லி அனுமந்த ராவ், விவேக், ஆதி ஸ்ரீநிவாஸ், பிரேம்சாகர், கடையம் ஸ்ரீஹரி உள்ளிட்டோர் உள்ளனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications