தெலுங்கானாவில் இடிந்து விழுந்த குகை.. சிக்கிய 8 பேரும் பலியான சோகம்.. வெற்றிபெறாத 8 நாள் மீட்பு பணி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் குகையில் கடந்த 22ம் தேதி முதல் சிக்கி தவித்த 8 தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடலை வெளியே மீட்டு எடுத்து வருவதற்கான பணி நடந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் உள்ளது.

டோமலாபெண்டா பகுதியில் உள்ள குகை கால்வாயில் கடந்த 22ம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கால்வாய் குகையின் மேல்புறம் 3 மீட்டர் தொலைவுக்கு திடீரென்று இடிந்து விழுந்தது.
அதாவது குகையின் உள்ளே 14 கிலோமீட்டர் தூரத்தில் 3 மீட்டர் நீளத்தில் மேற்புறம் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து குகையின் ஒருபகுதியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இன்னொரு பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கி கொண்டனர். மொத்தம் 50 பேர் குகைக்குள் சென்றனர்.
குகையின் மேற்புறம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் 42 பேர் வேகமாக வெளியே ஓடிவந்தனர். மாறாக 8 பேர் சிக்கி கொண்டனர். இதில் 2 பணியாளர்கள், 2 டெக்னிக்கல் ஸ்டாப்கள், 2 இன்ஜினியர்கள் அடங்குவர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கால்வாய் குகையின் உள்ளே இருந்த சகதி, இரும்புகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். 6 பேரும் சிக்கி இருக்கும் இடத்தின் அருகே மீட்பு பணியினர் சென்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள், கடற்படையின் மார்கோஸ் பிரிவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், எலி வலை எக்ஸ்பர்ட்ஸ் உள்ளிட்டவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் குகையில் சிக்கிய 8 பேரும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் இருக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களின் உடல்கள் இன்று இரவு அல்லது நாளைக்குள் மீட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் குகைக்குள் சிக்கியவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications