எந்த கணவனும் பார்க்கக்கூடாத எஸ்எம்எஸ்.. ஹைதராபாத்தை அதிர வைத்த வாட்ஸ் அப் உரையாடல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர் எதார்த்தமாக தன் மனைவியின் செல்போனை சோதித்த போது ஆடிப்போய்விட்டார். அவர் மனைவிக்கு வேறொரு நபரோடு திருமணத்தை மீறிய உறவு இருப்பது மட்டுமல்லாமல், அந்த நபரிடம் அடிக்கடி, "என் கணவரை கொன்றுவிடு.. அதை விபத்து போல சித்தரித்துவிடு" என்றெல்லாம் அவர் மனைவி வாட்ஸ அப்பில் கொஞ்சியும் வந்தது தெரியவந்திருக்கிறது. ராஜேஸ்வர ராவ் செல்போனில் இருந்த ஆதாரத்தோடு போலீஸில் புகாரளித்தார். இதனால் அவருடைய மனைவி, தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி உள்ளாராம்.

திருமணத்தை உறவு என்பது இன்றைக்கு எதார்த்தமான வாழ்க்கையை ஒப்பிட்டால், ஏதோ சீரியல்களை காட்டப்படும் விஷயமாக கடந்து போக முடியாது. ஏனெனில் கடந்த 15 வருடங்களில் கள்ளக்காதல் குற்றங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களில் கூட கள்ளக்காதல் பெருகிவிட்டது. கணவனை பிடிக்காமல் திருமணம் செய்த பெண்கள், கணவனுக்கு பதில் காதலனை தேடி செல்வது அதிகமாக உள்ளது. அதேபோல் மனைவிக்கு தெரியாமல் அலுவலக தோழி அல்லது பள்ளி தோழி அல்லது நண்பனின் மனைவியுடன் தவறான நட்பை ஆண்கள் தேடுவதும் அதிகரித்துள்ளது. இப்படியான திருமணத்தை மீறிய உறவுகளை சமூகம் ஏற்பது இல்லை என்பதால், கடைசியில் விபரீதத்திலேயே முடிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

An SMS no husband should ever see A WhatsApp conversation that shook Hyderabad

தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து தன்னைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உரையாடல்களை அனுப்பி உள்ளார். அந்த உரையாடலில், அவரது மரணத்தை ஒரு சாலை விபத்து போலக் காட்டத் திட்டமிட்டது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த காடே ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவி பவானிக்கும் கம்மம் பகுதியைச் சேர்ந்த கூரியர் டெலிவரி ஊழியரான சைதுலுவுக்கும் இடையில் கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகம் அடைந்தார். இதனால் அவரது மனைவியின் செல்போனை எதார்தத்மாக பார்த்த போது, கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும், அதில் தன் கணவனை கொன்று விபத்து போல் சித்தரித்துவிடு என்பதாக இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வர ராவ் போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கம்மம் ஊரகக் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றியுள்ளனர்.

ராஜேஸ்வர ராவின் புகாரின்படி, அவர் 2016-ல் பவானியைத் திருமணம் செய்துகொண்டார்; அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தனது மனைவிக்கு சைதுலுவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த கூரியர் ஊழியர் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று வந்தாராம்,
ஜூலை 27 அன்று கள்ளகாதல் குறித்து சந்தேகம் அடைந்த ராவ், பின்னர் தனது மனைவியின் செல்போனைச் சோதித்தபோது, ​​தன்னை கொல்வது குறித்து விவாதிக்கும் செய்திகளைக் கண்டதாகக் கூறப்படுகிறது.

வீட்டிற்குள் கணவரைக் கொன்றால் சந்தேகம் எழும் என்பதால், அவரது மரணத்தை ஒரு சாலை விபத்து போலக் காட்டலாம் என்று பவானி யோசனை தெரிவித்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது மற்றொரு உரையாடலில், சைதுலு தனது கணவரைக் கொல்லாவிட்டால், தானே அதைச் செய்வதாக பவானி கூறியதாகவும் கூறப்படுகிறது. தனது உயிருக்கும் மகள்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, ராவ் அதற்கான ஆதாரங்களையும் (ஸ்கிரீன்ஷாட்கள்) காவல்துறையிடம் சமர்ப்பித்தார்.

கம்மம் ஊரகக் காவல் ஆய்வாளர் எம். ராஜு கூறும் போது, காவல்துறை ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. விசாரணையின் ஒரு பகுதியாகக் குற்றச்சாட்டுகளும், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் நம்பகத்தன்மையும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்தார். டிஜிட்டல் ஆதாரங்களின் நம்பகத்தன்மை மற்றும் சூழல் குறித்துபோலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்; அதேவேளையில், பவானி மற்றும் சைதுலு ஆகியோர் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையில், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, தனக்கும் தனது மகள்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கணவர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+