மக்களுக்கு ஆணுறைகள் சப்ளை செய்யும் கட்சிகள்.. அடுத்து வயாகரா மாத்திரையா? இதுதான் ஆந்திர அரசியல்
ஹைதராபாத்: ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடக்க உள்ள நிலையில், அங்கே பிரச்சாரத்தில் ஆணுறைகள் பயன்படுத்தப்படுவது பேசுபொருள் ஆகி இருக்கிறது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், அத்துடன் அங்கே சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

பிரச்சாரத்திற்கு பொதுவாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு யுக்தியைக் கடைப்பிடிக்கும். ஆனால், அங்கே ஆந்திராவில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் பிரச்சார யுக்தி பேசுபொருள் ஆகியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
அரசியல் கட்சிகள்: ஆணுறைகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் பலரும் அதற்கு வாய்ப்பே இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் இரண்டிற்கும் தொடர்பு இருப்பதையே காட்டுகின்றன. அங்கே லோக்சபா தேர்தல் உடன் சட்டசபைத் தேர்தலும் நடக்க உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி ஆந்திராவில் இப்போது ஆணுறைகள் தான் முக்கியமான பிரச்சாரக் கருவியாக மாறியுள்ளன..
அங்குள்ள இரு முக்கிய கட்சிகளும் தங்கள் கட்சி சின்னங்கள் உடன் ஆணுறை பாக்கெட்களை வாக்காளர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தங்கள் சின்னங்களுடன் கூடிய ஆணுறை பாக்கெட்களை தங்கள் தொண்டர்கள் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
எதற்காக: இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் ஒருவரிடம் எதற்காக இதுபோல ஆணுறைகளைத் தருகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் நக்கலாக சொன்ன பதில் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. எதற்காக ஆணுறை தருகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், "பல குழந்தைகள் இருந்தால், அதிகப் பணம் விநியோகிக்கப்பட வேண்டும், அதனால்தான் இந்த ஆணுறைகள் அனைவருக்கும் தருகிறோம்" என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்வது அதில் கேட்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் தொண்டர்கள்.. பொதுமக்களுக்கு பல்வேறு பொருட்களைக் கொண்ட தொகுப்புகளை விநியோகித்து வருகிறார்கள். அப்படி விநியோகிக்கப்படும் தொகுப்பில் இந்த ஆணுறை பாக்கெட்டுகளும் இருக்கிறதாம். இரு தரப்பினரும் ஆணுறைகளைத் தந்தாலும், வெளியில் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொள்கின்றனர்.
மாறி மாறி அட்டாக்: இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "கட்சி பிரச்சாரத்திற்காக மக்களுக்கு ஆணுறை தருகிறார்கள்.. இது என்ன வகையான விளம்பர யுக்தி? அடுத்த என்ன.. வயாகரா தர போகிறார்களா... இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.. இது மேலும் மோசமாக போனால் நன்றாக இருக்காது" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் லோகோவுடன் கூடிய ஆணுறை பாக்கெட்டை தெலுங்கு தேசம் கட்சியும் பகிர்ந்துள்ளது. இதுதான் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலுக்குக் கையில் எடுத்துள்ள புது வகை பிரச்சார யுக்தியா என்றும் சாடியுள்ளனர். இப்படி ஆணுறைகளை வைத்து இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்வதும் இது தொடர்பாக மாறி மாறி விமர்சித்துக் கொள்வதும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications