"சத்தியமா சொப்னா கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை".. டென்மார்க்கில் இருந்து அலறும் 3-வது புருஷன்!
3 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது
ஹைதராபாத்: "சொப்னா கர்ப்பத்திற்கு சத்தியமா நான் காரணமில்லை" என்று 3வது புருஷன் ஆஞ்சநேயலு டென்மார்க்கில் இருந்து அலறுகிறாராம்.. கல்யாணம் ஆனது முதல் சொப்னாவை நான் தொடவே இல்லை, தாம்பத்யமே எங்களுக்கு நடக்கவில்லை என்கிறாராம்.. இதையடுத்து மோசடி பெண் சொப்னாவிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாச மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு.. இவர் டென்மார்க்கில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு வீட்டில் கல்யாணம் செய்து வைக்க பெண் தேடி வந்தனர்.
அந்த வகையில் மேட்ரிமோனியலிலும் பெண்ணை தேடியபோது, திருப்பதியை சேர்ந்த சொப்னா என்ற பெண் கிடைத்தார்.. இவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், ஆஞ்சநேயலுக்கு கடந்த டிசம்பர் மாதம் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

சொப்னா
3 மாசம் லீவில் வந்த ஆஞ்சநேயலு, திரும்பவும் டென்மார்க் செல்வதற்காக சொப்னாவை தன்னுடன் வர சொன்னார்.. ஆனால், கடமை தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு, சொப்னா அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.. அதனால் ஆஞ்சநேயலு மட்டும் கிளம்பி டென்மார்க் சென்றார். ஆஞ்சநேயலு, டென்மார்க் போய் சேர்ந்ததுமே சொப்னா பிரச்சனையை கிளப்பினார்.

மிரட்டல்
அவரது மாமனார், மாமியாரிடம் சென்று, "உங்க பையன் என்னை ஏமாத்திவிட்டார்.. எனக்கு நஷ்ட ஈடா பணம் இல்லேன்னா மானம், மரியாதையை வாங்கிவிடுவேன் என்று மிரட்டி 30 லட்சம் பணம் கேட்டுள்ளார்.. அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி, மருமகளை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றனர்.. அறிவுரை கூறினர்.. சொப்னா மிரட்டலுக்கு எல்லாம் அடிபணிந்து கிடந்தனர்.

புகார்
ஆனால், தொடர்ந்து டார்ச்சர் தந்து கொண்டிருந்ததால், பொறுக்க முடியாமல், டோணகொண்டா போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர். போலீசாரும் புகாரை பதிவு செய்து சொப்னாவை விசாரித்தனர். அப்போதுதான் அவர் பெயர் சொப்னாவே கிடையாது, உண்மையான பெயர் ரம்யா என தெரியவந்தது.. அடுத்தாக, இவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியே கிடையாது என்ற அடுத்து குட்டு வெளியானது.. அடுத்ததாக, இவர் ஏற்கனவே 2 பேரை கல்யாணம் செய்து ஏமாற்றி, பணத்தை சுருட்டியவர் என்பது தெரியவந்தது.

கர்ப்பம்
3வது புருஷன்தான் ஆஞ்சநேயலு.. ஒவ்வொரு புருஷனிடமும் ஒவ்வொரு பெயர் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்.. இதையடுத்து ரம்யாவை கைது செய்தபோது, அடுத்த அதிர்ச்சி போலீசாருக்கு காத்திருந்தது.. ரம்யா 3 மாசம் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார். அதனால் கைது செய்ய முடியாமல், காப்பகம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர் போலீசார்.. இன்னும் எத்தனை பேரை, என்னென்ன பெயர்களில் இவர் ஏமாற்றினார், அவர்களிடம் எவ்வளவு சுருட்டினார் என்ற விசாரணையும் நடக்கிறது.

அலறல்
இதனிடையே, ஆஞ்சநேயலு டென்மார்க்கில் இருந்து அலறுகிறாராம்.. சொப்னா அதாவது ரம்யா, கர்ப்பத்துக்கு தான் காரணமே இல்லை என்று..!! கல்யாணம் ஆனது முதல் அவளை தொடவே இல்லை, தாம்பத்தில் ஈடுபடவே இஙல்லை என்று ஆஞ்சநேயலு சொல்கிறாராம். எனவே, உண்மையிலேயே ரம்யா கர்ப்பமாக இருக்கிறாரா என்று போலீசார் மெடிக்கல் செக்கப் செய்ய உள்ளனர்.. அப்படி கர்ப்பமாக இருந்தால், அந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற அடுத்த விசாரணையும் ஆரம்பமாகும் என தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications