"நிர்வாண" வீடியோ கால்! பெண்ணிடம் பிறப்புறுப்பை காட்டிய ஆந்திர எம்பி..? சர்ச்சைக்கு கொடுத்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி நிர்வாண வீடியோ கால் தொடர்பான சர்ச்சையில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அங்கு அடுத்து 2024ஆம் ஆண்டில் தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

அதேநேரம் ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் தான் அமைச்சரவை மாற்றப்பட்டு இருந்தது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும் கூட மக்களின் எதிர்ப்பை பெற்றுவிடக் கூடாது என்பதில் ஜெகன் மோகன் ரெட்டி கவனமாக உள்ளது.

 ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவர், இளம் பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி எனக் கூறப்படும் ஒருவர் அரை நிர்வாணமாகப் பேசிக் கொண்டு இருக்கிறார். மேலும், அவர் தனது பிறப்புறுப்பை வீடியோ காலிலேயே காட்டுகிறார்.

 ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ காலில் இப்படி ஆபாசமாக நடந்து கொள்வது தவறானது என எதிர்க்கட்சியினர் சாடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர். அந்த குறிப்பிட்ட எம்பியை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கோரன்ட்லா மாதவ் என்பவர் தான் இந்த வீடியோவில் இருப்பதாகப் பலரும் கூறி வருகின்றனர். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை கோரன்ட்லா மாதவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தான் ஜிம்மில் சட்டையில்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ என்றும் அதை ஆபாச வீடியோவாக திரித்து வெளியிட்டு உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

 காழ்ப்புணர்ச்சி

காழ்ப்புணர்ச்சி

இணையத்தில் பரவுவது போலியான வீடியோ என்றும் இது தொடர்பாக போலீசாரில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். கோரன்ட்லா மாதவ் மற்றொரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் ஜிம்மில் சட்டையின்றி பயிற்சி செய்வது போல இருக்கிறது. இதுதான் உண்மையான வீடியோ என்று அவர் தெரிவித்து உள்ளார்.

புகார்

புகார்

இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீஸிலும் புகார் அளித்து உள்ளார். பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தான் குறிவைக்கப்பட்டதாகவும், தான் கடின உழைப்பால் உயர்ந்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உயர் சாதியினர் ஊடகங்கள் வேண்டுமென்றே தன்னை பழிவாங்குவதாகவும் இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+