கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு.. அசையாமல் உட்கார்ந்திருந்த நபர்.. மெல்ல உடம்பில் ஏறி.. என்னாச்சு பாருங்க
ஹைதராபாத்: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதை பார்த்ததுமே பொதுமக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது.. முதலில் இந்த வீடியோ பொய் என்று சொன்னார்கள்.. பிறகுதான், நடந்த சம்பவம் உண்மை என்று தெரிந்ததுமே கதிகலங்கிவிட்டார்கள்.
சோஷியல் மீடியாவில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே, அது உடனுக்குடன் ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுவது வழக்கமாகும்.

அரிய நிகழ்வுகள்: சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும். இப்போதும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.. இதைப்பார்த்ததுமே நெட்டிசன்கள் ஒரு செகண்ட் பதறிப்போய் விட்டார்கள்.
இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.. கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிங்கனப்பள்ளி கிராமத்தில் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் அந்த நபர்.. எந்நேரமும் குடித்து கொண்டே இருப்பாராம்..
மலைப்பாம்பு: சம்பவத்தன்றும், காலையிலிருந்து இரவு வரை மூக்கு முட்ட குடித்துள்ளார்.. குடிபோதையில் தள்ளாடி நடந்து வந்த அந்த நபர், அங்கிருந்த இருண்ட புதர்களுக்கு பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டார்.. அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு, அந்த நபரின் உடலில் மெல்ல ஏறியது.. பிறகு அந்த ராட்சத மலைப்பாம்பு, அந்த நபரின் கழுத்தை இறுக்கமாக சுற்றிக் கொண்டது.. ஆனால், மலைப்பாம்பு கழுத்தை சுற்றியது கூட தெரியாமல், அந்த நபர் போதையிலேயே கிடந்தார்..
இதைப்பார்த்ததுமே அந்த பகுதியிலிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.. சிலர் உடனடியாக விரைந்து வந்து, அந்த நபருக்கு உதவி செய்தனர்.. சாலையில் கிடந்த கட்டைகள், விறகுகளை எடுத்து வந்து, நபரின் கழுத்தை சுற்றிக்கிடந்த ராட்சத பாம்பை தள்ளிவிட்டு, அந்த நபரின் உயிரையும் காப்பாற்றினார்கள்..
வீடியோ: இந்த காட்சிகள்தான் வீடியோவாக வெளிவந்து இணையவாசிகளை கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது.. பார்ப்பதற்கே மிகவும் அதிர்ச்சியாகவும், பயங்கரமாகவும் உள்ளது இந்த வீடியோ..
குடிகார நபர், ஒரு டிரக் டிரைவர் என்கிறார்கள்.. வேலைக்கு சென்றுவிட்டு, திரும்பி வரும்போது, அளவுக்கு மீறி குடித்ததால், கால் தடுமாறி புதருக்கு பக்கத்திலிருந்த பிளாட்ஃபார்மில் விழுந்துவிட்டதாக சொல்கிறார்கள்... இந்த புதர் பகுதிகளுக்கு பின்பக்கத்தில் வனப்பகுதி இருக்கிறதாம்.. எனவே அருகிலிருந்த காட்டிலிருந்து ராட்சத மலைப்பாம்பு ஊர்ந்து வந்து, திடீரென அவரை சுற்றிக் கொண்டதாக கூறுகிறார்கள்.
வீடியோ உண்மையா: முதலில் இந்த வீடியோவை பார்த்த பலரும் இதனை உண்மை என்றே நம்பவில்லை.. ஏதோ செட்டிங் செய்யப்பட்ட வீடியோ என்று நினைத்துள்ளனர்.. பொதுமக்கள் அந்த நபரை உயிருடன் மீட்ட பிறகுதான், சம்பவம் நிஜம் என்று தெரியவந்தது. இதில் ஹைலைட் என்னவென்றால், பாம்பு உடம்பில் ஏறி, கழுத்தை சுற்றிக்கொண்ட பிறகும் அந்த நபருக்கு போதை தெளியவில்லை.. பொதுமக்கள் கட்டையை கொண்டு வந்து மலைப்பாம்பை கீழே தள்ளி, அந்த நபரின் உயிரை மீட்ட பிறகும்கூட, அந்த நபருக்கு போதை தெளியவில்லை.
ஆந்திரப்பிரதேசத்தில் காணப்படும் மலைப்பாம்புகள் Indian rock python என்ற ரகத்தை சேர்ந்ததாம். நாட்டிலுள்ள மிகப்பெரிய மலைப்பாம்புகளில் இதுவும் ஒன்றாகும். இவை சராசரியாக 10 முதல் 13 அடி நீளம் கொண்டவை. புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் பாறைகள், மலை அடிவாரங்கள் மற்றும் திறந்தவெளி காடுகள் போன்ற இடங்களில் இவை வளரக்கூடியவையாம்.
பரபரப்பு: ஆனால், இது விஷமற்ற பாம்பு இனமாகும்.. கருப்பு புள்ளிகளுடன் காணப்படும் இந்த பாம்புகள், வெள்ளை மஞ்சள் நிறத்திலும் இருக்கிறதாம்.. எனவே, வசிக்கும் இடங்களை பொறுத்து இந்த நிறம் மாறுபடலாம் என்கிறார்கள். குடிகார நபரின் உடலில் ஏறிய இந்த பாம்பு வீடியோதான் இணையத்தில் கிலியை கிளப்பி கொண்டிருக்கிறது. அப்படின்னா "கழுத்தை சுற்றின பாம்பு கடிக்காது" போல...!!
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications