போச்சு.. நமது அண்டை மாநிலம் ஆந்திர பிரதேசம் திவாலாகிறதா? கலங்க வைக்கும் கஜானா.. ஜெர்க்கான ஜெகன்
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தின் வருவாய் பற்றாக்குறை மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதே நிலைமை நீடித்தால் கண்டிப்பாக ஆந்திர பிரதேசம் மிக கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கூகுள் தொடங்கி ஈவி தொழிற்சாலைகள், புதிய ஐடி பார்க்குகள், கார் தொழிற்சாலைகள் குவிந்து வருகின்றன. கர்நாடகாவிலும் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள், செமி கண்டக்டர் நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகின்றன.

இன்னொரு பக்கம் தெலுங்கானாவும் பெங்களூரை முந்தும் அளவிற்கு ஹைதராபாத்தை ஜடி ஹப்பாக மாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதே தென்னிந்தியாவில் உள்ள இன்னொரு மாநிலமான ஆந்திர பிரதேசம் மிக கடுமையான நிதி நெருக்கடியை அடைந்து உள்ளது. ஆந்திர பிரதேசத்தின் வருவாய் பற்றாக்குறை மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது.
அரசின் அடிப்படை திட்டங்களை நிறைவேற்ற, சாலை பணிகளை நிறைவேற்ற, கல்வி திட்டங்களுக்கு செலவு செய்ய கூட பணம் இல்லாத அளவிற்கு மோசமான நிதி நிலைமையை ஆந்திர பிரதேசம் அடைந்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, வருவாய் பற்றாக்குறை (வருவாய்க் கணக்கில் வரவுகளை விட அதிக செலவு) 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளை முதல் காலாண்டிலேயே தாண்டியது.
பட்ஜெட் மதிப்பீடு ₹22,316.70 கோடி. வருவாய் பற்றாக்குறை என்று கணிக்கப்பட்டது. ஆனால் 2023 ஏப்ரல் மற்றும் ஜூன் இடையே இந்த வருவாய் பற்றாக்குறை ₹26,606.47 கோடியைத் தொட்டது. இந்த மதிப்பு முதல் காலாண்டிலேயே தாண்டியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பளம், ஓய்வூதியம், வட்டி, மானியம், பராமரிப்பு, நலத்திட்டங்கள் இவைதான் இந்த வருவாய் பற்றாக்குறைக்கு காரணம்.
பட்ஜெட்டில் இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற 2,28,540.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கையில் இருந்தது என்னவோ 72,719.17 மட்டுமே ஆகும். கிட்டத்தட்ட பட்ஜெட்டில் அறிவித்ததில் திட்டங்களுக்கு செலவிட 31 சதவிகிதம் மட்டுமே பணம் அம்மாநில அரசிடம் இருந்துள்ளது. இந்த காலத்தில் செலவு 72,719.17 கோடியாக இருந்தாலும்.. வருவாய் என்னவோ 46,112.70 கோடிதான். வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மத்திய வரிகளின் பங்கு மற்றும் மத்திய மானியங்கள வந்துள்ளது.
இப்போது இந்த வரி வருவாய் மேலும் குறைந்து.. வருவாய் பற்றாக்குறை புதிய சரிவை அடைந்து உள்ளது. FY-2023-24 இல், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான (5 மாதங்கள்) ஆந்திர பிரதேசத்தின் வருவாய் பற்றாக்குறை பின்வருமாறு.
1. ஆந்திர பிரதேசம்-37326 Cr
2. பீகார் -31103 Cr (ஜூலை வரை)
3. கேரளா -18118 Cr
4. தமிழ்நாடு -17614 Cr
5. ராஜஸ்தான்-15050 Cr
6. பஞ்சாப் -14819 Cr ஆகும். இதில் ஆந்திர பிரதேசத்தின் வருவாய் பற்றாக்குறை கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி மேலும் உயர்ந்து உள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் வருவாய் பற்றாக்குறை மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதே நிலைமை நீடித்தால் கண்டிப்பாக ஆந்திர பிரதேசம் மிக கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி அடையும் விதமாக, முக்கியமாக அங்கே கஜானா காலியாகும் நிலைமை கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அம்மாநில மக்கள் இடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications