“உன்னை நடுரோட்டில் எரிப்பேன்..” பாஜக தலைவர் என்னை மிரட்டினார் - பாகுபலி இயக்குநர் ராஜமவுலி பகீர்

பாஜக தலைவர் ஒருவர் தன்னை உயிரோடு நடுத்தெருவில் எரித்துவிடுவேன் என்று மிரட்டியதாக இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஜூனியர் என்டிஆர் முஸ்லிம்களின் தொப்பியை அணிந்து இருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டதற்காக பாஜகவை சேர்ந்த தலைவர் ஒருவர் அந்த காட்சியை நீக்காவிட்டால் தன்னை உயிரோடு நடுத்தெருவில் எரித்துவிடுவேன் என்று மிரட்டியதாக அதன் இயக்குநர் ராஜமவுலி பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார்.

மாவீரன், நான் ஈ, பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து இந்திய அளவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் தெலுங்கு இயக்குநர் ராஜமவுலி.

இவர் எடுத்த திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றாலும், அவை ஆர்.எஸ்.எஸ், சனாதன கொள்கையை பிரதிபலிப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஆர்.ஆர்.ஆர். படத்தில் மத குறியீடுகள் அதிகம் இருந்ததாக பலர் விமர்சித்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ் குறித்த கதை

ஆர்.எஸ்.எஸ் குறித்த கதை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய ராஜமவுலி, "என்னுடைய தந்தை விஜயேந்திர பிரசாத் ஆர்.எஸ்.எஸ். குறித்து எழுதிய கதையை வாசித்தவுடன் நான் அழுதுவிட்டேன். அதை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் பெருமைப்படுவேன்." என்று தெரிவித்தார். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். என அவர் இயக்கிய படங்களுக்கு அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தான் திரைக்கதை எழுதியவர்.

ராஜமவுலி மீது விமர்சனம்

ராஜமவுலி மீது விமர்சனம்

கடந்த ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவுடன், விஜயேந்திர பிரசாத்துக்கு எம்பி பதவி கிடைத்தது. இந்த நிலையில் ராஜமவுலியின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி பலர் அவரை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் என்றும், அதை தன்னுடைய திரைப்படங்களிலும் அவர் புகுத்தி வருவதாகவும் பலர் விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

ராஜமவுலி பேட்டி

ராஜமவுலி பேட்டி

இதுகுறித்து லண்டனில் ஒரு இதழுக்காக அளித்த பேட்டியில் ராஜமவுலி விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் "பாகுபலி ஒரு முழு நீள கற்பனை கதை. எந்த கொள்கையையும் நான் அதில் புகுத்தவே இல்லை. 2 இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் தியாகம் குறித்த படம்தான் ஆர்.ஆர்.ஆர். கற்பனையே அதில் அதிகம் கலந்து இருக்கிறது.

தொப்பி அணிந்த படம்

தொப்பி அணிந்த படம்

நான் இயக்கும் திரைப்படங்களில் பாஜக ஆதரவு நிலைபாடு இருப்பதாக சொல்பவர்களிடம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆர்.ஆர்.ஆர். படத்தில் கோமரம் பீமாக நடித்து இருக்கும் ஜூனியர் என்டிஆர் முஸ்லிம்களை போன்றே தொப்பி அணிந்து இருப்பார். அந்த புகைப்படத்தை நான் வெளியிட்டேன்.

மிரட்டிய பாஜக நிர்வாகி

மிரட்டிய பாஜக நிர்வாகி

இதனை கண்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், அந்த காட்சியை நீக்காவிட்டால் நடுத்தெருவில் வைத்து என்னை எரித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். நான் பாரதிய ஜனதா ஆதரவாளனா என்பதை இப்போது நீங்கள் சொல்லுங்கள். பாஜகவாக இருந்தாலும் முஸ்லீம் லீகாக இருந்தாலும் அல்லது வேறு அமைப்பாக இருந்தாலும் என்னுடைய நிலைபாடு இதுதான்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+