Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூனியர் என்டிஆருக்கு பின் “சின்னதோ” நடிகர்.. டோலிவுட்டை குறிவைக்கிறதா பாஜக? ஸ்பீடாகும் ஆபரேசன் சவுத்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: பாஜக செயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அறிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நடிகர்கள் உதவியுடன் அதை செய்துமுடிக்க திட்டமிடுகிறதோ என்ற கேள்வி அடுத்தடுத்த நிகழ்வுகளின் மூலம் எழுகிறது.

கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியாவை அமித்ஷா அறிவித்ததில் இருந்தே 6 மாநிலங்களிலும் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் முழு வீச்சாக இறங்கியுள்ளனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த நிலையில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் முக்கிய சம்பவங்கள் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்துக்காக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

ஐதராபாத்தில் 2 நாட்களுக்கு முன்பாக பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை 22 ஆம் தேதி நேரில் சந்தித்து பேசினார். பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் நடித்து 2 மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்களை வைத்திருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர்.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்

ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்

அந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான RRR திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தது.

அமித்ஷா சந்திப்பு

அமித்ஷா சந்திப்பு

இந்த படத்தின் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை கண்டு வியந்த அமித்ஷா அவரை நேரில் சந்திக்க விரும்பியதாக பாஜக தரப்பில் கூறப்பட்டாலும், அவரை கட்சியில் இணைக்கவே சந்தித்ததாக செய்திகள் கசிந்தன. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர். அரசியல் இணைய விருப்பமில்லை என்று அமித்ஷாவிடம் தெரிவித்துவிட்டாராம்.

நிதின் ஜே.பி.நட்டா சந்திப்பு

நிதின் ஜே.பி.நட்டா சந்திப்பு

இந்த நிலையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தெலுங்கு நடிகர் நிதினை சந்தித்து இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜே.பி.நட்டா, "பிரபல தெலுங்கு நடிகர் நிதினை தெலுங்கானாவில் சந்தித்தேன். அரசியல், சமூகம், கலாச்சார பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசித்தோம். தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து அவர் தெரிவித்தார். நான் அவரை வாழ்த்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

புதிய திரைப்படம்

புதிய திரைப்படம்

நிதின் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் மசேர்ல நியூஜகர்வகம் திரைப்படத்தில், அஞ்சலியுடன் இவர் நடனமாடி இருக்கும் "சின்னதோ" என்ற பாடல் வெளியாகி பல மொழிகளிலும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரை ஜே.பி.நட்டா சந்தித்து அரசியல் பேசி இருப்பதாக கூறியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+