Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்கார் பட பாணியில் களேபரம்.. வாக்காளர் பட்டியலில் காணாமல் போன பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பெயர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சர்கார் பட பாணியில் வாக்காளர் பட்டியலில் காணாமல் போன வீராங்கனை பெயர்-வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கானாவை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் எப்படி நியாயமாக நடைபெறும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக இன்று காலையிலேயே ஜ்வாலா கட்டா தனது குடும்பத்தோடு சென்றார்.

    Badminton player Jwala Gutta name is missing from voters list

    ஆனால் வாக்குச் சாவடியில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜ்வாலா கட்டா அவரது தந்தை, சகோதரி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தாயார் மட்டும் வாக்களிக்க முடிந்துள்ளது.

    இதனால் கோபமடைந்த ஜ்வாலா கட்டா, ட்விட்டரில் தேர்தல் நடவடிக்கை பற்றி விமர்சனம் செய்துள்ளார். இந்த தேர்தல் எப்படி நியாயமாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த பத்து வருடங்களாக இதே முகவரியில் வசித்து வரும் நிலையில்கூட, தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது சரியல்ல என கூறியுள்ள அவர், ட்விட்டரில் இதுபற்றி பேசி வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

    பிரபலங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து மாயமாகுவது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் தமிழில் வெளியான சர்கார் திரைப்பட கதைக் கரு மாதிரி ஆகியுள்ளது, ஜ்வாலா கட்டா நிலைமை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+