லேசான காய்ச்சல்.. டெஸ்ட் எடுத்தால் கொரோனா.. பாகுபாலி இயக்குனர் ராஜமௌலி டிவிட்.. அதிர்ச்சி!
ஹைதராபாத்: உலக புகழ்பெற்ற பாகுபாலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் ஆந்திர பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,20,390 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வரும், பாகுபாலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மட்டுமின்றி அவரின் குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது இயக்குனர் ராஜமௌலி இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், எனக்கும் என்னுடைய குடும்பத்தினந்தருக்கும் சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் ஏற்பட்டது . அதன்பின் காய்ச்சல் குணமடைந்துவிட்டது. இருந்தாலும் நாங்கள் கொரோனா சோதனை செய்து கொண்டோம். அதில் எங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

லேசான கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாங்கள தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை நன்றாகவே இருக்கிறோம்.
உடலில் ஆண்டிபாடி உருவாக காத்துகொண்டு இருக்கிறோம். உடல் நலம் சரியான உடன் வேகமாக, பிளாஸ்மா தானம் கொடுக்க தயாராக இருக்கிறோம், என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications