Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிப்போன ஆந்திரா.. குபீர்னு விழுந்த "ஆணுறை".. இதென்ன நம்ம லீடர்ஸ் இப்படி இறங்கிட்டாங்களே? அட தேவுடா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தல் நெருங்கி வரும்சூழலில், பிரச்சாரமும் அம்மாநிலத்தில் சூடுபிடித்து வருகிறது.. அந்தவகையில், மாநில அமைச்சர் ஒருவரின் வீடியோ, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

வழக்கமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் தேர்தல் நடக்க போகிறது என்றாலே, மொத்த பேரின் கவனமும் இந்த இரு மாநிலங்களில்தான் குவிந்து வரும்.. அதிலும் பிரச்சார நேரத்தில், அளவுக்கு அதிகமாகவே பொதுமக்களின் கவனத்தை, இம்மாநிலங்களின் வேட்பாளர்கள் கவர்ந்திழுத்து விடுவார்கள்.

Big announcement and YSCRP, TDGs Political Strategies use of condoms in their Election campaigns

இப்படித்தான் கடந்த முறை தெலுங்கானாவில் நடந்த பிரச்சார கூத்துகளை இந்த நாடே வேடிக்கை பார்த்தது.. ஒரு சுயேச்சை வேட்பாளர், பெட்டி நிறைய செருப்புகளையும், அதனுடன் ராஜினாமா கடித ஜெராக்ஸ்களையும் கொண்டு வந்தார்..

ஒரு ஜோடி செருப்பு: பிறகு, அங்கிருந்த வேட்பாளர்களிடம், ஒரு ஜோடி செருப்பையும், ஒரு ராஜினாமா கடித ஜெராக்ஸையும் தந்தார்.. "இந்த கடிதத்தில் சொல்லியிருக்கும் திட்டங்களை நான் அமல்படுத்தாவிட்டால், என்னை இந்த செருப்பாலேயே நீங்கள் தாராளமாக அடிக்கலாம்" என்று கூறி, தனக்கு வாக்கு சேகரித்தார்.

அதேபோல, ராஷ்ட்டீரிய சமிதி வேட்பாளர் ஒருவர், நேராக சலூன் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இறங்கிவிட்டார்.. அப்போது அந்த வழியில் ஒரு குழந்தை, திறந்தவெளியில் மலம் கழித்து கொண்டிருந்தது.. இதை பார்த்த அந்த வேட்பாளரோ ஓடிப்போய், அந்த குழந்தையின் அம்மாவிடம் தண்ணீர் வாங்கி, குழந்தைக்கு கால் கழுவிவிட்டார். இந்த வீடியோவெல்லாம் வைரலாகி காண்போரை திகைக்க வைத்தது.

Big announcement and YSCRP, TDGs Political Strategies use of condoms in their Election campaigns

டான்ஸ்: சமீபத்தில்கூட, அமைச்சர் மல்லா ரெட்டியின் வீடியோ வைரலானது.. இவர் கட்சியில் 70 வயது சீனியர்.. எந்த விழாவுக்கு போனாலும் டான்ஸ் ஆடிவிடுவார்.. அதுவும் ஜூம்பா டான்ஸ் சூப்பராக ஆடுவார்.

2 மாதங்களுக்குமுன்பு, மேட்சல் தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது, அங்கிருந்த பெண்கள் கூட்டத்துக்குள் திடீரென புகுந்து உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியை அலேக்காக தூக்கி, தன்னுடைய மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.. அந்த பாட்டிக்கோ வெட்கம் வெட்கமாக வந்துவிட்டது.

Big announcement and YSCRP, TDGs Political Strategies use of condoms in their Election campaigns

இதோ ஆந்திராவில் ஒரு அக்கப்போரு நடந்துள்ளது பாருங்கள்.. ஆந்திராவில் எம்பி தேர்தலுடன் சேர்த்து, சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால் அங்கே அரசியல் களம் செம சூடாகி கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு, இன்னொரு பக்கம் ஒய்ஆர்எஸ் காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டி என இருவருமே மோத போகிறார்கள்.

தேர்தல் அறிவிப்பு: விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க போகிறார்கள். ஆனால், அப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகளும் உடனே அமலுக்கு வந்துவிடும்.. அப்படி அமலுக்கு வந்துவிட்டால், வாக்காளர்களுக்கான இலவச பொருட்களை வழங்கவே முடியாது. அதனால்தான், 2 கட்சிகளும் இப்போதே "இலவசங்களை" அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.

அந்த இலவசங்களில் ஒன்றாக, ஆணுறை பாக்கெட்டும் இடம்பெற்றுள்ளதுதான் ஹைலைட்டாகி உள்ளது.. 2 கட்சிகளிலுமே ஆணுறை தரப்போகிறார்களாம்.. 2 கட்சிகளின் பெயர், சின்னத்துடன், அந்த ஆணுறை பாக்கெட்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.. ஒரு ஆணுறை பாக்கெட்டின் மீது கட்சியின் சின்னமும், பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதை பார்த்து, மொத்த பேரும் வாயடைத்து போயுள்ளனர்.

கமெண்ட்கள்: இந்த ஆணுறை பாக்கெட் இலவசமானது, பல விமர்சனங்களையும், கிண்டல்களையும் கிளப்பி வருகிறது. குடும்பத்தில் கூடுதல் உறுப்பினர்கள் இருந்தால், அரசுக்கு செலவு அதிகரிக்கும் என்பதால், இப்பவே ஆணுறை பாக்கெட் தருகிறீர்களா? அப்பறம் என்ன வயாக்ரா தரப்போறீங்களா? என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+