கட்சிகளை வளைத்தது போல 'தெலுங்கானா காங்கிரஸ் ஆட்சி’யையே அலேக்காக தூக்கும் பாஜக? பிஆர்எஸ் பகீர்!
ஹைதராபாத்: அரசியல் கட்சிகள், எம்பி, எம்எல்ஏக்களை வளைத்து வரும் பாஜக தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியையே வளைத்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சியான கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி பகீர் குற்றம்சாட்டியிருக்கிறது.
தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. தெலுங்கானா காங்கிரஸ் அரசின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார்.

தெலுங்கானாவில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியின் குஜராத் மாடல் அரசைப் புகழ்ந்து பேசினார். தமக்கு மூத்த சகோதரரைப் போன்றவர் பிரதமர் மோடி என்றார். காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை புகழ்ந்ததும் குஜராத் மாடல் குறித்து சிலாகித்துப் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விவாதங்களில், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் போல மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் இணக்கமான போக்கையே ரேவந்த் ரெட்டி விரும்புகிறார்; இது தெலுங்கானா மாநிலத்தின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. காங்கிரஸ் கட்சிக்கு அப்பால் தெலுங்கானாவின் நலன் சார்ந்த முடிவு என்கின்றன ரேவந்த் ரெட்டியின் ஆதரவாளர்கள்.
ஆனால் எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியோ வேறு விதமான விமர்சனத்தை முன்வைக்கிறது. அதாவது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, விரைவில் மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா போல பாஜக பக்கம் சாய்ந்துவிடுவார். சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தவர் ஏக்நாத் ஷிண்டே. காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்து முதல்வரானவர் ஹிமந்த பிஸ்வா சர்மா. இவர்களது பாணியைத்தான் ரேவந்த் ரெட்டியும் பின்பற்றப் போகிறார் என்பதற்கான சமிக்ஞைதான் இது என கொளுத்திப் போட்டுள்ளது. இது தெலுங்கானா அரசியலில் பெரும் விவாதங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ரேவந்த் ரெட்டியின் இந்த பாஜக மீதான திடீர் கரிசனம் டெல்லி காங்கிரஸ் மேலிடத்தையும் கதிகலங்க வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications