பிசினஸ் வாய்ப்பு கேட்ட பெண் தொழிலதிபர்.. கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்த விஐபி? ரேவந்த் ரெட்டி ஆட்சியிலா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிசினஸ் வாய்ப்பு கேட்டு சென்ற பெண் தொழிலதிபரை கெஸ்ட் ஹவுஸுக்கு வருமாறு அழைத்துள்ளார் ஒருவர்.. அப்படி அழைத்தது முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.. இப்படியொரு குற்றச்சாட்டு வெடித்து கிளம்பவும், தெலங்கானா மாநிலமே பரபரப்பாகி விட்டது.. யார் இந்த பெண்? என்ன நடந்தது?

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கே. சோபா ரெட்டி. மிதுனா ஆட்ஸ் என்ற விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான இவர், கடந்த 3 ஆண்டுகளாக வெளிப்புற விளம்பரத் துறையில் சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்புகளை பெற முயன்று வந்திருக்கிறார்..

Businesswoman

தெலுங்கானா தொழிலதிபர்

வழக்கமான டெண்டர்கள் கோரப்படும் வரை, வருவாய் பகிர்வு முறையில் தற்காலிகமாக தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அந்த பெண் அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மாநகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களையும் அணுகி வந்திருக்கிறார்..

ஒருகட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கவும் முயற்சி செய்துள்ளார். அதேபோல அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரிடமும் தனது வேண்டுகோளை எடுத்து சென்றுள்ளார்..

இந்த நிலையில்தான், முதல்வருக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் நபரை சோபா ரெட்டி அணுகியுள்ளார். தன்னுடைய கோரிக்கையை சொன்னதுமே, இது தொடர்பாக பேசுவதற்காக கெஸ்ட் ஹவுஸுக்கு வருமாறு அந்த நபர் சோபா ரெட்டியை அழைத்தாராம்.. இதைக்கேட்டதுமே சோபா ரெட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கெஸ்ட் ஹவுஸ் நபர் யார்

இதுகுறித்து சோபா ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில், "என்னை கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்தது அவுகரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சுமத்தவோ, அவரது பெயரை வெளியிடவோ நான் விரும்பவில்லை.. முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.. அரசு தொடர்பான விவகாரங்கள் மற்றும் சந்திப்புகள் அனைத்தும் வெளிப்படையான மற்றும் கண்ணியமான அரசு அமைப்புகளின் வாயிலாகவே நடைபெறுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்..

நான் எந்தவிதமான சிறப்பு சலுகையையும் கேட்கவில்லை. சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்பு, சமமாக நடத்தப்படுதல் மற்றும் தொழில் செய்வதற்கான கண்ணியம் ஆகியவற்றை மட்டுமே எதிர்பார்க்கிறேன்.. என்னுடைய கோரிக்கையை அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும்.. இந்தத் துறையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

சிறப்பு சலுகைகள்

சோபா ரெட்டி நீண்ட காலமாகவே விளம்பரத் துறை தொடர்பாகவும் புகார் சொல்லி வருகிறாராம்.. சில விளம்பரக் கட்டமைப்புகளுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டும் தொடர்ந்து செயல்படுவதாகவும், அரசாணை எண் 68-ன் கீழ் சில திட்டங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக லோக் ஆயுக்தாவிடம் புகார் அளித்த பிறகு, விளம்பரத் துறையைச் சேர்ந்த விஜய் ரெட்டி தன்னை அவதூறாக பேசியும் மிரட்டியும் வந்ததாக சோபா ரெட்டி புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் விஜய் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிபடும் பாலமுரி வெங்கட் பெயர்

இதனிடையே, காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் பாலமுரி வெங்கட்டின் பெயரும் இந்த விவகாரத்தில் இடம்பெற்றது. விஜய் ரெட்டி தனக்கு சகோதரர் என்றும், அவருக்கு அரசியல் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இதை பாலமுரி வெங்கட் மறுத்துள்ளார். அவருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்..

ஆனால், கெஸ்ட் ஹவுஸ் அழைப்பு விவகாரமும் அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ளது. முதல்வருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் அந்த நபர் யார், அவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு, பெண் தொழிலதிபரை எதற்காக கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்தார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

குறிப்பாக, பாஜகவும், பாரத் ராஷ்டிர சமிதியும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளன. அதே நேரத்தில், சோபா ரெட்டி யாருடைய பெயரையும் வெளிப்படையாகக் குறிப்பிடாத நிலையில், அவர் சொன்ன குற்றச்சாட்டு குறித்து தெலங்கானா அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+