சந்திரபாபு நாயுடு செம சர்ப்ரைஸ்! 310 வருடகால திருப்பதி லட்டுக்கு 1 தங்க நாணயம், அம்பானி மெகா கிஃப்ட்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒரு அட்டகாசமான மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 15-ம் தேதி ஆந்திர மாநில அரசு சார்பில் முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பித்து விழாவை முறைப்படி தொடங்கி வைக்கிறார். அத்துடன் திருமலையில் சுமார் ரூ.900 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு அதிநவீன திட்டங்களையும், பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்க உள்ளார். என்னென்ன ஸ்பெஷல் பக்தர்களுக்கு காத்திருக்கின்றன என்பதை பார்ப்போம்..!!

திருமலையில் பக்தர்களுக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வசதிகளும், நவீன மாற்றங்களும் தயாராகி வருகின்றன. இந்த ரூ.900 கோடி திட்டங்களில் ஒட்டுமொத்த ஆன்மீக உலகையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மிக முக்கிய அம்சம், உலக புகழ்பெற்ற டி.சி.எஸ் (TCS) நிறுவனத்தின் ரூ.145 கோடி நிதி மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பில் உருவாகியுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் தான்.

Chandrababu Naidu Tirupati Surprise

திருமலை திருப்பதி

சர்வதேச தரத்தில், அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகெங்கிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில்தான், உலகெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களையும் ஆன்மீகவாதிகளையும் கட்டிப்போட்டுள்ள திருப்பதி லட்டு தயாரிக்கத் தொடங்கி 310 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு மாபெரும் லட்டு திருவிழா நடைபெறுகிறது. இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாடும் விதமாக முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு சிறப்பு தங்க நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.

லாட்ஜ் வளாகம் ஏற்பாடு

திருப்பதிக்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர பக்தர்களின் மிகப்பெரிய கவலையும், சிக்கலும், அங்கே தங்குவதற்கு ரூம்கள் கிடைப்பது தான். அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சுமார் ரூ.600 கோடி மாபெரும் செலவில் ஒரே நேரத்தில் 10000 பக்தர்கள் வசதியாக தங்குவதற்கான மிகப்பெரிய லாட்ஜ் வளாகம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது.

இதன் மூலம் திருமலையில் பல காலமாக நிலவி வந்த அறை தட்டுப்பாடு இனி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் அம்பானி அசத்தல்

அதேபோல் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் ரூ.120 கோடி நிதியுதவியுடன் அதிநவீன ஒருங்கிணைந்த சமையலறைகளும் திருமலையில் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அவரது மகன் ஆனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நவீன மின்சார பஸ்களை திருமலைக்கு வழங்கியுள்ளார்.

இந்த மின்சார பஸ்களை இயக்குவதற்காக சிறப்பு சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், 50 புதிய பஸ் ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

உண்டியல் கலெக்‌ஷன் அமோகம்

மொத்தத்தில் திருமலையில் பக்தர்களுக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வசதிகளும், நவீன மாற்றங்களும் ஜரூராக தயாராகி கொண்டிருக்கின்றன..

இந்த மகிழ்ச்சிக்கு நடுவே நேற்று இன்னொரு மகிழ்ச்சி வெளியாகி உள்ளது.. அதாவது நேற்றைய ஒரே நாளில் மட்டும் 81,064 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் டோக்கன் பெற்று சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் மிகுந்த பொறுமையுடன் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.. அதுமட்டுமல்ல நேற்று ஒரே நாளில் 4.09 லட்சம் லட்டுகள் விற்பனையாகி ஆன்மீக வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+