கூடவோ குறையவோ கூடாது.. சரியாக மதியம் 1.25 மணிக்கு பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ்.. காரணம் என்ன?
தெலுங்கானா முதல்வராக இன்று பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ், தான் பதவி ஏற்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்துள்ளார்.
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக இன்று பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ், தான் பதவி ஏற்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்துள்ளார்.
தெலுங்கானா முதல்வராக இன்று சந்திரசேகர ராவ் பதவி ஏற்க இருக்கிறார். இதனால் ஹைதராபாத்தில் இப்போதே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று மதியம் 1.30 மணிக்கு சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார். மதியம் நடக்கும் பதவியேற்பு விழாவில் கவர்னர் நரசிம்மன் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

மாபெரும் வெற்றி
தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 21 தொகுதிகளில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது, பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

யாரும் நினைக்கவில்லை
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் இவ்வளவு சிறப்பாக வெற்றிபெறுவார் என்று யாருமே நினைக்கவில்லை. பெரும்பான்மை கிடைக்கும் என்று சிலர் நினைத்தனர், சிலர் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கும், தொங்கு சட்டமன்றம் உருவாகும் என்று நினைத்தனர். ஆனால் சந்திரசேகர ராவ் அனைத்தையும் முறியடித்து வெற்றிபெற்றுள்ளார்.

சரியான நேரத்தில்
சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக தெலுங்கானா முதல்வர் ஆகிறார். இவர் சரியாக இன்று மதியம் 1.25 மணிக்கு தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஒரு நொடிக்கு முன்போ பின்போ தாமதம் இல்லாமல் சரியாக மதியம் 1.25க்கு பதவி ஏற்க உள்ளார்.

அப்போது
இதற்கு பின் ஜோசியர் ஒருவரின் அறிவுரை காரணம் என்று டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தொடக்கத்தில் இருந்தே ஜாதகத்தின்படிதான் சந்திரசேகர ராவ் செயல்பட்டு வருகிறார். ஆட்சியை 4 வருடத்தில் துறந்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது, தேர்தலில் நிற்க வேட்புமனு தாக்கல் செய்தது என்று எல்லாமே இவர் குறிப்பிட்ட நேரத்தில் ஜாதகம் பார்த்துதான் செய்துள்ளார். இன்று மதியம் 1.25தான் அவருக்கு மிக உகந்த நேரம் என்று ஜாதகம் கூறியதால் அந்த நேரத்தில் பதவி ஏற்க உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications