மோடி எப்டி பேசி இருக்காரு பாருங்க.. “சர்வாதிகாரம்” - பழைய வீடியோவை காட்டி சந்திரசேகர் ராவ் கேள்வி
ஐதராபாத்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதை விமர்சித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் நரேந்திர மோடியின் பழைய வீடியோவை போட்டுக்காட்டி இதையே நாங்களும் சொல்கிறோம் என்று கூறியுள்ளார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை எந்த பிரதமரின் ஆட்சிகாலத்திலும் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் வேகமாக சரிந்திருக்கிறது. என்றார்."

மோடியின் பழைய வீடியோ
அப்போது அங்கிருந்த தொலைக்காட்சி ஒன்றில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோவை செய்தியாளர்கள் முன் அவர் போட்டுக்காட்டினார். அதில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, "நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரியவில்லை. பின்னர் ஏன் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது? அரசாங்கம் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நாட்டுக்கு அரசின் பதில் தேவைப்படுகிறது." என்று கூறினார்.

நேர்மையானவரா?
உடனே வீடியோவை நிறுத்திய சந்திரசேகர் ராவ், "நாங்களும் இதையேதான் பாஜக ஆளும் மத்திய அரசிடம் கேட்கிறோம். நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு மோசமாகி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒருவேளை தன்னை பற்றி தான் சொல்லிக்கொள்வதைபோல நேர்மையானவராக இருந்தால், இதுகுறித்து ஏன் தற்போது பேச மறுக்கிறார்? நீங்கள் கேள்வி கேட்டால் மற்றவர்களும் கேட்பார்கள்.

சர்வாதிகாரம்
நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. இது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? இந்த நாட்டில் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த நரேந்திர மோடி அரசு சர்வாதிகாரம் செய்து வருகிறது. நாட்டின் ஒவ்வொருவரின் கண்முன்பாகவும் இது நடந்துகொண்டிருக்கிறது." என்றார்.

இந்திய ரூபாய் மதிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அண்மையில் 18 காசுகள் சரிவடைந்த இந்திய ரூபாய் மதிப்பு, 79.26 ஆக உயர்ந்தது. கடந்த செவ்வாய் கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 42 காசுகள் சரிவடைந்தது. கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும் கடுமையாக அதிகரித்தது.
-
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்?












Click it and Unblock the Notifications