விஸ்வரூபம்.. தெலங்கானாவில் கேசிஆரிடம் ஆட்சியை பறிக்கும் காங்கிரஸ்! சீனிலேயே இல்லாத பாஜக..பரபர சர்வே
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் எனவும், தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சியை பறிகொடுப்பார் எனவும் பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதேவேளையில் தெலங்கானா தேர்தலில் பாஜக சீனுக்குள் வர வாய்ப்பே இல்லை எனவும் அந்த கருத்து கணிப்பு முடிவு வெளிப்படுத்தி உள்ளது.
தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ் - இதற்கு முன்பு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தெலங்கானாவை பொறுத்தமட்டில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழலில் அங்கு அசைக்க முடியாத சக்தியாக சந்திரசேகர ராவ் உள்ளார்.
அதாவது சந்திரசேகர ராவ் கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 6 பேரும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 7 பேரும், பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்களும், மற்றவர்களுக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சி தலைவர்களும் அதற்கான பணிகளை தொடங்கி விட்டனர். அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பு முன்பே சந்திரசேகரராவ் தனது 119 தொகுதிகளுக்கு 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
இதில் புதுமுகங்களுக்கு அவர் அதிகம் வாய்ப்பளிக்காமல் சிட்டிங் எம்எல்ஏக்களையே மீண்டும் களமிறக்கி உள்ளார். சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியோடு (தற்போதை எம்எல்ஏவாக இருக்கும் தொகுதி) கமரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தான் போல் டிராக்கர் (poll Tracker) சார்பில் தெலங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பு என்பது ஜூலை மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1ம் தேதி 2 மாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது. இந்த கருத்து கணிப்பில் மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 580 பேர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். தற்போது அந்த கருத்து கணிப்பு முடிவு என்பது வெளியாகி உள்ளது.
அதன்படி தெலங்கானா சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கும். மாறாக தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் சட்டசபை தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 42 சதவீத ஓட்டுகளை பெற்று 63 முதல் 69 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தனித்து ஆட்சியை கைப்பற்ற 60 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் குறைந்தபட்சம் 63 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டு உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கலாம் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாறாக தற்போதைய முதல்வரான சந்திரசேகரரராவின் பிஆர்எஸ் கட்சி 34 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பெற்று ஆட்சியை இழக்கும். இந்த கட்சி 35 முதல் 40 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் தெலங்கானாவில் முதல் முறையாக ஆட்சி மாற்றம் என்பது நிகழும். ஏனென்றால் 2014ல் தெலங்கானா மாநிலம் உருவான பிறகு 2 முறை சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இதில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி (முன்பு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பாஜக 9 சதவீத ஓட்டுக்கள் பெற்று 3 முதல் 5 தொகுதிகளிலும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 10 சதவீத ஓட்டுகள் பெற்று 2 முதல் 5 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மற்றவர்கள் 5 சதவீத ஓட்டுகள் பெற்று 2 முதல் 6 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என ‛போல் டிராக்கர்' கருத்து கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications