இதென்ன கலாட்டா! தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு டிச.9-ல் பதவியேற்குமாம்.. அப்படி என்ன நாள் தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்லுமாம், அப்படி வெல்லும் நிலையில் டிசம்பர் 9-ந் தேதிதான் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்பார் என 'நாள் குறித்து' வைத்திருக்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.
2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை என்பது 60 ஆண்டுகால போராட்டம். இந்தப் போராட்டத்துக்காக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது முதலே அம்மாநிலத்தில் டிஆர்எஸ் அதாவது தற்போதைய பாரத் ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானாவில் 2014 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வென்றது; ஆனால் 2018 தேர்தலில் 19 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. பாஜகவும் கூட 2014-ல் 5 இடங்களையும் 2018-ல் ஒரே ஒரு இடத்தையும்தான் தெலுங்கானாவில் பெற்றது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது.
தெலுங்கானா தேர்தல் 2023: ஆனால் தற்போதைய தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள் வெவ்வேறான முடிவுகளைத் தெரிவித்துள்ளன. பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்- ஹாட்ரிக் வெற்றியைப் பெறும்; காங்கிரஸ் இம்முறை ஆட்சி அமைத்துவிடும் என்றெல்லாம் இந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜகவுக்கு அதிகபட்சமாக 6 அல்லது 8 இடங்கள்தான் என சிங்கிள் டிஜிட் இடங்களைத்தான் கொடுத்துள்ளன.
என்னது டிச.9-ல் பதவியேற்பா?: இன்று தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு காலை முதலே அமைதியாக நடைபெற்றது. தெலுங்கானாவில் சீரான வாக்குப் பதிவு நடந்தது. இந்த நிலையில் பிஆர்எஸ் செல்வாக்கான தொகுதிகள் பலவற்றில் மந்தமான வாக்குப் பதிவு இருப்பதாக சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் பிஆர்எஸ், பாஜகவினர் மந்தமாக வாக்களிக்கின்றனர்; காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வாக்களிக்கின்றனர் எனவும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த நிலைமை தொடர்ந்தால் டிசம்பர் 9-ந் தேதி தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பார்; ஏனெனில் காங்கிரஸுக்கு டிசம்பர் 9-ந் தேதி மிக முக்கியமான நாள் என்றும் பதிவிட்டுள்ளனர்.
சோனியா காந்தி: தெலுங்கானா தனி மாநிலம் அமைந்த போது "தெலுங்கானா தளி" (தெலுங்கானா தாய்) என போற்றப்பட்டார் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி. அத்துடன் சோனியா காந்தி அம்மன் திருக்கோவில் கூட தெலுங்கானாவில் கட்டப்பட்டது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றியதால் சோனியாவை அம்மாநில காங்கிரஸ் கொண்டாடி வருகின்றனர். சோனியா காந்தியின் பிறந்த நாள் டிசம்பர் 9-ந் தேதி என்பதால் அன்றைய தினம்தான் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்பார் எனவும் ரொம்பவே கனவுடன் காத்திருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்!
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?












Click it and Unblock the Notifications