பெரிய சதி முறியடிப்பு! பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களை குறிவைத்த பயங்கரவாதிகள் கைது!கடைசி நிமிடத்தில் பரபர

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகச் சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பயங்கரவாத அச்சுறுதல்கள் அதிகரித்து வருவதாக ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எல்லை தாண்டி நுழைய முயலும் பயங்கரவாதத்தைப் பாதுகாப்புப் படையினர் கட்டுப்படுத்துகின்றனர். அதேபோல உள்நாட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கைது

கைது

இதனிடையே நாட்டில் வலதுசாரி தலைவர்களைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் சம்மந்தப்பட்ட போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அதன்படி மத்திய குற்றப்பிரிவு சிறப்புப் புலனாய்வு போலீசார் ஹைதராபாத்தில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முகமது அப்துல் ஜாஹத் என்பவரைக் கைது செய்து உள்ளனர்.

 பயங்கரவாதிகள் உடன் தொடர்பு

பயங்கரவாதிகள் உடன் தொடர்பு

அவருக்கு உதவியாக இருந்த மாஸ் மற்றும் சமியுதீன் என இருவரையும் சதி வழக்கில் கைது செய்து உள்ளார். இவர்களுக்குப் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் உடன் தொடர்பு உள்ளதாகவும் போலீசார் குற்றஞ்சாட்டி உள்ளனர். நாட்டில் உள்ள பல முக்கிய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போலீசார்

போலீசார்

நாட்டில் நாசகார வேலைகளில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டு இருந்ததாக போலீசார் எச்சரித்து உள்ளனர். நேற்று இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சிறப்புப் புலனாய்வு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் 39 வயதான அப்துல் ஜாஹத் என்பவரைக் கைது செய்தோம்.

 சகோதரர்

சகோதரர்

அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தெலங்கானாவில் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்து நாங்கள் கைது செய்தோம்" என்றார். இப்போது கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ஜாஹத்தின் சகோதரர் தான் கடந்த 2005இல் ஹைதராபாத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜாஹேத் என்பவரது சகோதரர் ஆவார்.

 பல்வேறு வழக்குகள்

பல்வேறு வழக்குகள்

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்துல் ஜாஹத் மீது ஏற்கனவே பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அவர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். அப்துல் ஜாஹத் ஹைதராபாத்தில் இளைஞர்களைப் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கவும் முயன்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பரபரப்பு

பரபரப்பு

போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி உள்ளனர். மேலும், ரூ.3,91,800 ரொக்கம், 5 மொபைல் போன்கள், 2 கையெறி குண்டு, ரூ.1,50,000 மதிப்புள்ள பணம், ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+