சடலத்தை.. பைக்கில் உட்கார வைத்து.. சுடுகாட்டுக்கு ஓட்டி சென்ற கொடுமை.. அலறி போன ஆந்திரா

கொரோனா பாதித்த சடலத்தை பைக்கில் கொண்டு சென்றனர் உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பைக்கை ஒருவர் ஓட்ட, பின்னாடி ஒருவர் உட்கார்ந்து கொண்டு, நடுவில் பிணத்தை பிடித்தபடி போகிறார்.. இப்படி ஒரு காட்சி நம் தேசத்தில் அரங்கேறி உள்ளது.

இந்தியா முழுதுமே தொற்று அதிகமாகி உள்ளது.. வடமாநிலங்களில் இதன் தாக்கம் பன்மடங்காகி உள்ளது.. அதேபோல தென்மாநிலங்களை பொறுத்தவரை, கர்நாடகத்தில் நிலைமை கைமீறி கொண்டிருக்கிறது.. கேரளா தத்தளித்து கொண்டிருக்கிறது.. தமிழ்நாடு தடுமாறி கொண்டிருக்கிறது. ஆந்திரா அலறி கொண்டிருக்கிறது.

ஆந்திராவிலும், ஆஸ்பத்திரிகளில் இடமே இல்லாத நிலை உள்ளது.. இந்நிலையில், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மண்டசா மண்டல் கிராமத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது..

 கொரோனா

கொரோனா

இங்கு வசித்து வந்த ஒரு பெண்ணுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது.. அவருக்கு 50 வயது இருக்கும்.. கொரோனா டெஸ்ட்டும் எடுத்துள்ளார். உடனடியாக ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார்.. ஆனால், டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள்ளேயே அந்த பெண் திடீரென இறந்துவிட்டார்.

சடலம்

சடலம்

ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டாலும், அவரை கொண்டு செல்ல எந்த ஆம்புலன்சும் அங்கு இல்லை.. மற்ற வாகனங்களும் கிடைக்கவில்லை.. அதனால் கொரோனா பாதித்த சடலத்துடனேயே உறவினர்கள் அங்கேயே காத்திருந்தனர்.. கடைசி வரை ஒரு ஆம்புலன்சும் கிடைக்காததாலும், சடலத்தை அங்கேயே ரொம்ப நேரத்துக்கு வைத்திருக்க முடியாததாலும், பைக்கிலேயே கொண்டு செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

அதனால், அந்த பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில் சடலத்தை உட்கார வைத்தே சுடுகாட்டுக்கு உடலை கொண்டு சென்றனர். இத்தனைக்கும் ஆந்திராவில் எத்தனையோ கட்டுப்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதை கண்காணிக்க ஒரு தனிபிரிவு என்றுகூட நிறைய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன..

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும், இந்த விஷயத்தில் எதுவுமே உதவ முடியவில்லை.. மகனும், மருமகனும் பெண்ணின் சடலத்தை பைக்கில் வைத்து ஓட்டி செல்லும் போட்டோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.. இதை பார்த்து மக்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. இருந்தாலும், இப்படி ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+