நடுரோட்டில்.. தாசில்தாரையே அரைமணி நேரம் அலறவிட்ட பசு மாடு இதுதான்.. காரணம் கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க!
தாசில்தாரை அரை மணி நேரம் விரட்டி துரத்திய பசுமாட்டின் வீடியோ வைரலாகிறது
ஹைதராபாத்: தாசில்தார் ஒருவரை பசு மாடு ஒன்று அரை மணி நேரம் விடாமல் துரத்தி துரத்தி விரட்டி உள்ளது.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் வானபர்த்தி பகுதியில் உள்ளது பிரஜ வைத்திய சாலை.. இந்த ரோட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. தாசில்தார் அந்த பக்கமாக காரில் சென்றிருக்கிறார்.

ஆனால், இதை பார்த்த பசுமாடு காரில் சென்றவரை விரட்டி கொண்டே போனது.. ஆரம்பத்தில் காருக்குள் இருந்த தாசில்தார் இதை சரியாக கவனிக்கவில்லை.. கார் கொஞ்ச தூரம் போன பிறகுதான் தாசில்தாருக்கு தன்னை பசுமாடு துரத்தி வந்தது தெரிந்துள்ளது.
இப்படியே அரைமணி நேரம் விடாமல் அவரை துரத்தி சென்றது.. காரை நிறுத்திவிட்டால், பசு மாடும் துரத்தி வருவது நின்றுவிடும் என்று நினைத்து, காரையும் நிறுத்திவிட்டார்.. ஆனால் அந்த மாடு, காருக்கு முன்பு போய் வழிமறித்து நின்று கொண்டது.. இதனால் காரை எடுக்க முடியாமல், அடுத்த சிக்கல் உருவானது.
மறுபடியும் காரை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பினால், அப்போது மறுபடியும் காரை துரத்தி கொண்டு ஓடுகிறது பசுமாடு.. இதை அங்கிருந்தோர் வீடியோவும் எடுத்துவிட்டனர்.. இதை பற்றி உள்ளூர் வாசிகள் சொல்லும்போது, "அந்த பசு தங்கியிருந்த கொட்டகையை இந்த தாசில்தார் தான் வேற இடத்துக்கு மாற்றிவிட்டாராம்.. அதனால்தான், பசுவானது அவரை விடாமல் துரத்துகிறது என்றனர்.
ஆனால் தாசில்தார் இதை பற்றி சொல்லும்போது, "அந்த பசுக்கு ரொம்ப பாசம்.. அதனாலதான் இப்படி துரத்திட்டு வந்தது.. இதே பசுமாடு, நிறைய பேரை இப்படித்தான் துரத்திட்டு வந்தது.. கொட்டகை எல்லாம் வேற இடத்திற்கு மாற்றப்படவில்லை"என்றார்.
ஆனால், உண்மையிலேயே எதுக்காக தாசில்தாரை இப்படி துரத்தி சென்றோம் என்று அந்த பசுமாட்டுக்குதான் தெரியும்.. இருந்தாலும் அரை மணி நேரம் தாசில்தாரையே கதற விட்ட அந்த பசுமாடுதான் சோஷியல் மீடியாவில் ஹைலைட்டாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications