"மைனர்" சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 30 வயது பெண்.. ஒரே தெருவாம்.. தாயை காணாமல் தவித்த 2 குழந்தைகள்
மைனர் சிறுவனை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
ஹைதராபாத்: மைனர் சிறுவனுடன் கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. 30 வயதாகிறது... திருமணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஆனால், திடீரென அதே தெருவை சேர்ந்த 15 வயது சிறுவனிடம் இந்த பெண்ணுக்கு ஈர்ப்பு வந்துவிட்டது.. அந்த சிறுவன், அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த சிறுவனிடம் நெருங்கி பழகி உள்ளதாக தெரிகிறது.. மேலும் எதைஎதையோ சொல்லி மனதை கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

மிஸ்ஸிங்
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி, தனது நண்பனை சந்திக்க செல்வதாக வீட்டில் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, சிறுவன் வெளியே சென்றானாம்.. அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.. எங்குமே மகனை காணவில்லை.. அப்போதுதான், அதே தெருவில் இருந்த அந்த 30 வயது பெண்ணும் காணவில்லை என்ற தகவல் வெளியானது..

நம்பர்
மனைவியை காணாமல், அவர் கணவன் தெருத்தெருவாக தேடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர் சிறுவனின் பெற்றோர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது சந்தேகம் அதிகமாமானது.. உடனே, சிறுவனின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்... போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பெண்ணின் செல்போன் நம்பரை பெற்று விசாரணையை ஆரம்பித்தனர்.. நம்பர் டிரேஸ் செய்யப்பட்டதில், ஹைதராபாத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது...

சிக்னல் - போன்
இதையடுத்து போலீசார் ஹைதராபாத்துக்கு விரைந்தனர்.. செல்போன் சிக்னலை வைத்தே, அந்த பெண் தங்கியிருந்த இடத்தையும் சுற்றி வைத்தனர்.. அங்கு பாலா நகரில் ஒரு வீட்டையே வாடகைக்கு எடுத்து, சிறுவனுடன் அந்த பெண் தங்கி இருந்தது தெரியவந்தது.. பின்னர், போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு கொண்டு வந்தனர்... சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.. பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியானது..

தெருவில் சிறுவன்
அந்த சிறுவன் தினமும் தெருவில் ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போதும் இந்த பெண் கவனித்து வந்தாராம்.. அப்போதுதான், சிறுவனை மயக்கியதுடன், அவனுடன் உல்லாசம் அனுபவித்தும் வந்தாராம்.. இதற்கு, கணவரும், தன்னுடைய 2 குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் சிறுவனை கடத்தி வந்து குடித்தனம் செய்ததாக போலீசில் வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு, சிறுவனுடன், பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications