புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மகளுடன் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 125 உணவு வகைகளை சமைத்து பரிமாறி அசத்தி உள்ளார் மாமியார் ஒருவர். ஆந்திராவில் நடந்துள்ள ருசிகர உணவுகள் குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் மருமகன்களுக்கு எப்போதுமே ஸ்பெசல் கவனிப்பு உண்டு. அதுவும் கல்யாணமான புதிதில் என்றால் சொல்லவே வேண்டாம். அசத்தி விடுவார்கள்.

Dinner with 125 varieties of food for the new son-in-law in Bhimavaram in Andhra

இதில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது, அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் விருந்து வைப்பார்கள்.

ஆந்திராவில் புதிதாக திருமணம் ஆன உடன் மருமகனுக்கு விருந்து வைப்பதில் அங்குள்ள பலர் பிரம்மாண்டத்தை காட்டி அசர வைப்பார்கள். அப்படித்தான் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரத்தில் ஒரு மாமியார், தனது புதுமாப்பிள்ளைக்கு 125 வகை உணவுகளை சமைத்து டேபிளில் அடுக்கி உள்ளார்.

இதை கண்டு வியந்து போன மருமகன், தனது மனைவியுடன் ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். மனைவிக்கு ஊட்டிவிட முயற்சிக்கிறார் கணவர், அதற்கு அந்த பெண், எனக்கு வேண்டாம் மாமா என்கிறார்.

சரி, இந்த 125 வகை உணவுகளில் என்னென்ன உணவுகள் இருக்கின்றன என்பதை நீங்களே வீடியோவில் பாருங்கள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+