மருமகள் கல்யாணத்திற்கு இடம் கொடுக்க மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி.. தங்கை ஷர்மிளாவுடன் மோதல்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது சகோதரி ஒய்எஸ் ஷர்மிளாவுக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இதற்கிடையே தான் அடுத்த மாதம் ஒய்எஸ் ஷர்மிளாவின் மகள் திருமணம் பெங்களூரில் உள்ள அவர்களின் குடும்ப பேலஸில் நடைபெற உள்ளது.

dispute-with-ys-sharmila-ysr-congress-jagan-mohan-reddy-refuses-to-allow-nieces-wedding-at-a-famil

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது தங்கை பெயர் ஒய்எஸ் ஷர்மிளா. இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சனை, சொத்து பிரச்சனை உள்ளது.

இதனால் ஜெகன்மோகன் ரெட்டியும், ஒய்எஸ் ஷர்மிளாவும் பேசிக்கொள்வது இல்லை. ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் இருக்கிறார்.

ஒய்எஸ் ஷர்மிளா மகள் உள்ளார். அவரது பெயர் அஞ்சலி ரெட்டி. இவருக்கும், சோமாலா ரகுரமி ரெட்டி என்பவருக்கும் கடந்த மாதம் 24ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சோமாலா ரகுரமி ரெட்டி அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர்களின் திருமணத்தை நவம்பர் 25ம் தேதி ஒய்எஸ் ஷர்மிளா பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள அவர்களின் குடும்ப பேலஸில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

அந்த பேலஸை குறிப்பிட்டு பத்திரிகைகள் அச்சிட்டு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், தமிழக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கொடுத்து திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் தான் தனது மருமகள் திருமணத்திற்காக எலகங்கா பேலஸை ஜெகன் மோகன் ரெட்டி வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத்திற்கு பொதுவாக இந்த பேலஸ் உள்ளதால் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தனது தாய் விஜய்ம்மா வழியாக அனுமதி கோரியுள்ளார். ஆனால் அதற்கு ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துவிட்டாராம்.

இதனை ஒய்எஸ் ஷர்மிளாவின் உதவியாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். இதனால் ஒய்எஸ் ஷர்மிளா தற்போது தனது மகள் திருமணத்துக்கு வேறு இடத்தை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ் ஷர்மிளா இடையேயான மோதலை அதிகப்படுத்தி உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி - ஒய்எஸ் ஷர்மிளாவின் தந்தை பெயர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி. ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர். ஹெலிகாப்டர் விபத்தில் அவர் பலியானார். அவர் இறப்பதற்கு முன்பாக தனது குடும்ப சொத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ் ஷர்மிளா ஆகியோருக்கு சரிபாதியாக வழங்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஹைதராபாத், இடுபுலபாயா (சொந்த ஊர்) மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ் ஷர்மிளா ஆகியோருக்கு அருகருகே சொகுசு வீடுகள் கட்டி கொடுத்திருந்தார். பெங்களூரில் உள்ள எலகங்காவில் 20 ஏக்கரில் எதிரெதிரே 2 பேலஸ்கள் உள்ளன. இதில் ஒன்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு. இன்னொன்று ஓய்எஸ் ஷர்மிளாவிற்காக தந்தை ராஜசேகர ரெட்டி கட்டினார்.

ஆனால் ஒய்எஸ் ஷர்மிளா பெயரில் அந்த பேலஸ் பதிவு செய்யவில்லை. ராஜசேகர ரெட்டி பெங்களூர் செல்லும்போது இங்கு தங்கி வந்தார். தந்தை ராஜசேகர ரெட்டி மறைந்த பிறகு ஜெகன் மோகன் ரெட்டி பெங்களூர் பேலஸில் ஒய்எஸ் ஷர்மிளாவிற்கு பங்கு கொடுக்க மறுத்து வருகிறார். தற்போது அங்கு வைத்து தனது மகளின் திருமணத்தை நடத்த ஒய்எஸ் ஷர்மிளா திட்டமிட்டுள்ள நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+