பார்க்க அப்படியே அல்லு அர்ஜுன் மாதிரி இருக்கும் ரசிகருக்கு ஜாக்பாட்.. இப்போ லட்சங்களில் புரள்கிறார்!
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் இப்போது டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் வசூலில் புதிய சாதனையைப் படைத்திருந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே பார்க்க அல்லு அர்ஜுன் போலவே இருக்கும் அவரது ரசிகருக்கு இப்போது ஒரு மாபெரும் ஜாக்பாட் அடித்துள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா. இந்த படத்தின் 2வது பாகம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது. தியேட்டர்களில் தாறுமாறாக ஓடிய இந்தப் படம் வசூலில் புதிய சாதனை படைத்தது. குறிப்பாக இந்தி பெல்ட்டில் வசூலை வாரிக் குவித்தது.

அல்லு அர்ஜுன்
ரூ.700-800 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த இரு படங்களும் சேர்ந்து ரூ.2000 கோடிக்கு மேல் வசூலித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பிறகு தென்னிந்தியச் சினிமாவைப் புரட்டிப்போட்ட படம் எனக் கூடச் சொல்லலாம். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனும் சினிமாவில் அடுத்த கட்டத்திற்குப் போய்விட்டார். அல்லு அர்ஜுன் மட்டுமின்றி அவரது ரசிகர் ஒருவருக்கும் கூட புஷ்பா படத்தால் ஜாக்பாட் அடித்துள்ளது.
அதாவது டெல்லியைச் சேர்ந்தவர் நிஷாத்.. இவர் பார்க்க அல்லு அர்ஜுன் மாதிரியே இருப்பார். அதேநேரம் புஷ்பா பட லுக்கை பார்த்தால் கிட்டதட்ட அல்லு அர்ஜுனே வந்துவிட்டது போல இருக்கும். அதையே அவர் ஒரு வாய்ப்பாகவே மாற்றிக்கொண்டார். அல்லு அர்ஜுன் மாதிரியே இருப்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் இவரை அழைக்கத் தொடங்கினர்.
புஷ்பா தோற்றம்
மேலும், சமூக வலைத்தளங்களிலும் கூட இவர் தனது பெயரை Pushpa lookalike என்றே மாற்றிக்கொண்டார். அதாவது புஷ்பா போலவே இருப்பவன் என்பது இதற்கு அர்த்தமாகும். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். அதில் புஷ்பா பட ரீல்ஸை போட்டுத் தெறிக்கவிடுவார்.
லட்சங்களில் புரள்கிறார்
இப்படியே சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவருக்கு இப்போது ஒரு ஜாக்பாட் அடித்தது. அதாவது இவருக்கு விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் அவர் எதுவுமே செய்யத் தேவையில்லையாம். சும்மா புஷ்பா படத்தில் வரும் புஷ்பராஜ் கேரக்டர் போல வந்து சென்றால் போதுமாம். இதற்குச் சம்பளமாக ரூ.12 லட்ச ரூபாயைத் தூக்கிக் கொடுத்துள்ளனர். இவ்வளவு பெரிய சம்பளத்தைப் பார்த்து நிஷாத் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார்.
அல்லு அர்ஜுன் உடன் சந்திப்பு
நிற்பது, நடப்பது என அப்படியே அல்லு அர்ஜுன் மாதிரியே எல்லாம் செய்து கொண்டு இருக்கும் நிஷாத்திடம் அல்லு அர்ஜுனை நேரில் பார்த்து இருக்கிறீர்களா எனக் கேட்டால், அதற்கும் சோஷியல் மீடியாவையே பதிலாகத் தருகிறார். சமீபத்தில் தான் அல்லு அர்ஜுனையும் அவரது மகளையும் நிஷாத் பார்த்திருக்கிறார். அந்த போட்டோவையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பார்க்க அல்லு அர்ஜுன் மாதிரியே இருக்கும் ஒரே காரணத்திற்காக நிஷாத்திற்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இந்தச் செய்தி இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் , பலரும் நிஷாத்திற்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். குறிப்பாக அல்லு அர்ஜுன் ரசிகர்களே அதிகம் வாழ்த்தி வருகிறார்கள்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications