பாத்தீங்களா.. ஆவேசமா இங்கே பேசிட்டு.. அப்படியே மலைப்பாதையில் தன்னந்தனியே அண்ணாமலை.. "ஹைலைட்" வார்த்தை
திருப்பதி மலைப்பாதை ஏறும் அண்ணாமலையின் வீடியா ஷேர் ஆகி வருகிறது
ஹைதராபாத்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்ததுமே, பாஜகவினர் திரண்டு வந்து பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..
தினம் தினம், ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு கொண்டு, இன்னமும் ஆவேசம் அடங்காமல் உள்ளார் காயத்ரி ரகுராம்.. அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு விமர்சனங்களையும் அண்ணாமலை மீது வைத்து வருகிறார்.
அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புகிறேன். அவர் வெளியே வந்து என்னை எதிர்கொள்வாரா? உண்மையைச் சொல்லுங்கள்.. உண்மையை உலகம் அறியட்டும் என்று கதறி கேட்டுக் கொண்டே இருக்கிறார் காயத்ரி,
ஹைதராபாத்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்ததுமே, பாஜகவினர் திரண்டு வந்து பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..
தினம் தினம், ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு கொண்டு, இன்னமும் ஆவேசம் அடங்காமல் உள்ளார் காயத்ரி ரகுராம்.. அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு விமர்சனங்களையும் அண்ணாமலை மீது வைத்து வருகிறார்.
அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புகிறேன். அவர் வெளியே வந்து என்னை எதிர்கொள்வாரா? உண்மையைச் சொல்லுங்கள்.. உண்மையை உலகம் அறியட்டும் என்று கதறி கேட்டுக் கொண்டே இருக்கிறார் காயத்ரி,

ஆதாரம் எங்கே
மற்றொருபக்கம், அண்ணாமலையால் கட்சிக்குள் நிறைய குழப்பங்கள், சர்ச்சைகள் நிலவுகிறது, அவரை நீக்க வேண்டும் என்று பாஜக தலைமைக்கு சொந்த கட்சியில் இருந்தே அழுத்தங்களும், புகார்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நடுவில் திமுக அரசு மீது, நாள்தவறாமல் புகார்களை அண்ணாமலை அண்ணாமலை சொல்லி வருவதால், திமுக கடுப்பாகி உள்ளது.. அந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் எங்கே? இதுவரை ஒரு குற்றச்சாட்டையாவது அண்ணாமலை நிரூபித்திருக்கிறாரா என்று திமுக தரப்பில் கேள்விகள் எழுகின்றன..

கதகதப்பு
இப்படி நாலாபுறமும் பாஜக குறித்த ஹாட் செய்திகள் வட்டமடிக்கும் நிலையில், ஏதாவது பேட்டிகளை தந்து, அதற்கு மேல் களத்தை சூடாக்கிவிடுகிறார் அண்ணாமலை.. அந்தவகையில் நேற்று முன்தினம் நடந்த பேட்டியின் கதகதப்பு இன்னமும் குறையாமல் உள்ளது.,. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இங்க வர்றவங்க எல்லாரும் கட்சியில யாரோ சொன்னாங்கன்னு தான் தூக்கிட்டு வர்றீங்க. உங்களுக்கு திமுக கிட்ட கேள்வி கேட்க தைரியம் இருக்கா? கமலாலயம் வந்தா மட்டும் எக்ஸ்ட்ரா தைரியம் வருது? டிஜிட்டல் மீடியா, யூடியூப், 4 லைக் போட வேண்டும், 4 ட்வீட் போட வேண்டும்னு 40,000 ரூபாய் கேமராவை வாங்கிட்டு வந்து பிரஸ் மீட்டில் உட்கார்ந்துட்டு பேசுறாங்க.. உங்க பேர் என்ன? உன் சேனல் பேர் என்ன? என்று கேட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார் அண்ணாமலை.

விஐபி பிரேக்
இப்படி ஒரு பேட்டியை கொந்தளிப்புடன் தந்துவிட்டு, அப்படியே திருப்பதி மலையையும் ஏறிவிட்டார்.. அது தொடர்பான செய்திகள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. நேற்றிரவு கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து மலையேறி சென்றார் அண்ணாமலை.. இரவு மலையிலேயே தங்கிய அவர், இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.. தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினார்கள்.

கைகுலுக்கிட்டாங்க
கோயிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலையை, அங்கிருந்த தமிழக பக்தர்கள் பார்த்து அடையாளம் கண்டுகொண்டார்கள்.. அண்ணாமலையை பார்த்துமே மகிழ்ச்சியுடன் ஓடிவந்த அவர்கள், அவரை சூழ்ந்துகொண்டு செல்பிகளை எடுத்து கொண்டார்கள்.. அதேபோல, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அண்ணாமலையை பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டார்கள்.. அவர்களும் அண்ணாமலையிடம் வந்து, கைகுலுக்கி பேசியதுடன், செல்பியும் எடுத்து கொண்டனர்.. பிறகு செய்தியாளர்கள் அண்ணாமலையை பேட்டி எடுத்தனர்..

லேசாக தாடி
கடவுளிடம் என்ன வேண்டிக் கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, "தமிழக மக்கள் எல்லாருமே சிறப்பாக வாழ அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பி வைக்கும்" என்றும் அண்ணாமலை பதிலளித்தார்.. இதற்கு நடுவில், அண்ணாமலை மலைப்பாதையில் ஏறி வரும் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது. அதில் அண்ணாமலை, லேசாக வளர்ந்திருந்த தாடி மற்றும் கருப்பு கலர் வேஷ்டியுடன், தன்னந்தனியாகவே மலையில் ஏறி வருகிறார்..

நடுநடுவே
அவருடன் 2 பேர் மட்டுமே பின்னாடி பாதுகாப்புக்காக நடந்து வருகிறார்கள்.. இரவு நேரம் என்பதால், அந்த மலைப்பாதையில் வேறு யாருமே காணப்படவில்லை.. எதிரே வந்த ஒரு பக்தரின் தோளை தொட்டு நலம் விசாரித்துவிட்டு, மறுபடியும் அமைதியாக நடந்து செல்கிறார் அண்ணாமலை.. நடுநடுவே தென்படும் கோபுரங்கள், சாமி சிலைகளை கண்டு நின்று வணங்கிவிட்டு மறுபடியும் நடந்து செல்கிறார்.. இந்த வீடியோவை பாஜகவினரே வைரலாக்கியும் வருகிறார்கள். அண்ணாமலை தனியாக நடந்து வருவதை பார்த்ததுமே, "மத்திய அரசு தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

விஜயகாந்த்
மேலும் சிலரோ, எளிமையான மனிதர்.. ஊடகங்கள் இவர் இமேஜ்ஜை காலி செய்ய துடிக்கின்றன.. ஆனால் இவரோ, அதற்கு பிடி கொடுக்காமல் திருப்பி அடிக்கிறார்.. வருங்கால ஊடகங்களே, அண்ணாமலை வித்தியாசமான ஆளுமை. இவரை கணிப்பது கஷ்டம். இது நாள் வரை நீங்க வளர்ந்த வளர்ப்பு அப்படி. உங்களை மாத்திக்கோங்க... பிறந்ததற்க்கு ஒரு பிராயச்சித்தம் கிடைக்கட்டும்.. ஒரு மனிதன் நேர்மையாக நியாயமானவனாக இருந்தால் இந்த உலகத்தில் வாழ விட மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் விஜயகாந்த் மற்றும் அண்ணாமலை வாழ்க்கை" என்றெல்லாம் பாஜகவினர் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications