ஹைதராபாத்திலேயே மகேஷ் பாபு கிட்ட மட்டுமே இருக்கும் சொகுசு கார்.. விலை தெரியுமா? அப்படி என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு புதிதாக வாங்கியுள்ள காரின் விலை என்ன தெரியுமா?

பிரபலங்கள் வைத்திருக்கும் கார்களின் மீதும் அதன் விலை மீதும் ரசிகர்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்களை பார்த்துவிட்டு அதே மாடல் கார்களை வாங்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கார்கள் மட்டும் அல்ல. அவர்கள் கட்டியிருக்கும் வாட்ச், போட்டிருக்கும் டீசர்ட், செல்லபிராணிகள் என எல்லாவற்றின் மீது ரசிகர்களின் கவனம் இருக்கும். அந்த வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வைத்திருக்கும் கார் குறித்த விவரங்கள் வைரலாகி வருகின்றன.

Do you know what is the rate of the car which Actor Mahesh Babu holds?

மகேஷ் பாபு தற்போது குனடூர் காரம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்தான் இணையத்தை கலக்கும். ஆனால் இந்த முறை அவர் வைத்திருக்கும் கார் குறித்த தகவல்கள் வைரலாகி இணையத்தையே ஆக்கிரமித்துள்ளது.

அவர் ரேஞ்ச்ரோவர் எஸ்வி என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு ரூ 5.4 கோடியாம். இதே போன்ற கார் மலையாள நடிகர் மோகன்லால், ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி உள்ளிட்டோரிடமும் இருக்கின்றன. ஆனால் மகேஷ் பாபு வைத்திருக்கும் கோல்டன் ரேஞ்ச் ரோவர்தான் அரிய வகை மாடல் என்பதால் அனைவரின் கவனமும் அதன் மீது உள்ளது.

இந்த மாடல் காரை ஹைதராபாத்தில் மகேஷ் பாபு மட்டுமே வைத்திருக்கிறார். அது போல் தற்போதைய நிலவரப்படி விலை உயர்ந்த காரும் இதுதான். இந்த காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் சொகுசு காராக சொல்லப்படுகிறது. இந்த காரின் எடை 2650 கிலோவாகும். இதில் 5 டோர்கள் உள்ளன. 5 பேர் பயணம் செய்யலாம். இதில் 8 கியர்கள் உள்ளன. ஒரு ரிவர்ஸ் கியரும் உள்ளது.

ஒரு நிறத்தில் தங்க நிறம் கலந்து இந்த கார் வடிவமைக்கப்படுகிறது. இந்த கார் பேட்டரி மூலமும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் சீட்டுகள் உயர்தர லெதர்களால் ஆனவை. 10 இன்சிற்கு டிஸ்பிளே உள்ளது. இந்த காரில் 3 வகைகள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களும் அதிகமாக இருக்கிறது என்பதால் இந்த காரை பிரபலங்கள் விரும்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+