ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர்.. காங்கிரஸ் அரசு அறிவிப்பு.. பின்னணி என்ன?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை சூட்ட காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி உலகளாவிய நிறுவனங்களை பெருமைப்படுத்தும் வகையில் அதன் பெயர்களும் சாலைகளுக்கு சூட்டப்படும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் இந்நிலையில் தான் இன்று தெலுங்கானா அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதாவது தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சாலைகளுக்கு டொனால்ட் டிரம்ப் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானா அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தெலுங்கானா தலைநகர் ஹைதரபாாத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் அமைக்கப்படும் ஆர்ஆர்ஆர் (Regional Ring Road) எனப்படும் பசுமை வழி சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நினைவாக அவரது பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை ஒட்டிய உயர்மட்ட சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது டொனால்ட் டிரம்ப் அவென்யூ என்று பெயர் சூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தெலுங்கானா அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் எழுத உள்ளது.
மேலும் தற்போது ‛கூகுள் மேப்' பலருக்கும் வழிகாட்டி வருகிறது. அதனை பாராட்டும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள சாலைக்கு ‛கூகுள் ஸ்ட்ரீட்' என பெயர் சூட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே விரைவில் கூகுளின் பெரிய வளாகமாக வர உள்ள இடத்தில் அமையும் சாலைக்கு இந்த பெயர் வைக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் அமெரிக்க-இந்தியா ஸ்ரேட்டிஜிக் க பார்ட்னர்ஷிப் மன்றத்தின்(USISPF) ஆண்டு மாநாடு நடந்தது. இதில் தெலுங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது ஹைதராபாத்தில் உள்ள முக்கியமான சாலைகளுக்கு உலகளாவிய நிறுவனங்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். அதன்படி ரேவந்த் ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து விரைவில் அங்கு செயல்பட்டு வரும் உலகளாவிய நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு செல்லும் சாலைகளின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி விரைவில் மைக்ரோசாப்ட், விப்ரோ உள்ளிட்ட அலுவலகங்கள் இருக்கும் இடங்களின் சாலைகளுக்கும் அந்த நிறுவனத்தின் பெயர்கள் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன பகுதியில் உள்ள சாலைக்கு மைக்ரோசாப்ட் ரோடு என்றும், விப்ரோ அலுவலகத்தில் உள்ள ரோட்டுக்கு விப்ரோ சந்திப்பு என்றும் பெயர் வைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக இப்படியான உலகளாவிய நிறுவனங்களின் பெயர்களை ஒவ்வொரு இடத்துக்கு சூட்டும்போது வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவுக்கு முன்னுரிமை கொடுக்கும். இதன்மூலம் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த முடியும் என்று ரேவந்த் ரெட்டி நம்புகிறார்.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications