தெலுங்கில் ட்வீட் போட்ட "தெலுங்கானா" தமிழிசை.. பேசமாட்டேன் போங்க.. டூ விட்ட தமிழர்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Tamilisai soundararajan tweet in telugu

    ஹைதராபாத்: ஆந்திராவின் கோதாவரி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பழக்க தோசத்தில் வழக்கம் போல் தமிழில் டுவிட் போட்டார். இதற்கு தெலுங்கானா ஆந்திரா மக்கள் நீங்கள் தெலுங்கில் டுவிட் போட வேண்டும் என கோரிக்கை வைக்கவே உடனே தெலுங்கில் டுவிட் போட்டார்.

    தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தனது டுவிட்டர் பக்கத்தில் "ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி ஆற்றில் படகு விபத்து செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். பாதிப்படைந்தவர்களுக்கான அத்தனை உதவி மற்றும் மீட்பு பணிகளை ஆந்திர,தெலுங்கானா அரசுகள் முழு வீச்சில் செயல்படுத்திவருகிறது. படகு விபத்தில் பாதித்தவர்களின் குடும்பங்களின் துயரங்களில் நானு‌ம் பங்கெடுத்துக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.

    Bigg boss tamil 3: This week ticket to grand finale task for the contestants

    இதை பார்த்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்கள் பலர் நீங்கள் தெலுங்கானா மாநில ஆளுநர் எனவே நீங்கள் உங்கள் ஆறுதலை தெலுங்கில் அல்லது இந்தியில் வெளியிடுங்கள். அப்போது தான் இங்குள்ள மக்களுக்கு புரியும் என கருத்து கூறியிருந்தனர். இந்த கருத்தை பலரும் தமிழிசையை டேக் செய்து பதிவிட்டு இருந்தனர். இதை பார்த்த தமிழிசை உடனடியாக ஆங்கிலத்திலும் பதிவிட்டார். அத்தோடு பலர் தெலுங்கில் பதிவிட சொன்னதால், இப்போது தெலுங்கிலும் அதே கருத்தை பதவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றுள்ள தமிழிசை சவுந்திரராஜன் முதல்முறையாக தெலுங்கில் டுவிட் பதிவிட்டு உள்ளதை பார்த்த தெலுங்கானா மக்கள், இனி எந்த கருத்தாக இருந்தாலும் தெலுங்கில் தான் பதிவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அதேநேரம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அக்கா நீங்கள் தெலுங்கில் பதிவிட்டால் எப்படி எங்களுக்கு புரியும்என்று செல்லமாக கோபித்துக் கொள்கிறார்கள். பிரபாகரன் என்பவர் தமிழிசை சவுந்திரராஜனை டேக் செய்து, போங்க உங்க கூட டூ. கவர்னர் ஆனதால தெலுங்குல டுவிட் போடுறீங்க.. எங்கள மறந்துடீங்க.. இனி உங்க கூட பேச மாட்டேன் என செல்லமாக கோபித்துக்கொண்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+