இன்ஜினில் தொங்கிய உடல்.. ரயிலில் இருந்து இறங்கிய பைலட்டுக்கு அதிர்ச்சி! உடலில் சொட்டிய ரத்தம்
ஹைதராபாத்: தெலுங்கானா அருகே ரயிலில் இருந்து இறங்கிய இன்ஜின் லோகோ பைலட்டுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் இன்ஜினின் முன்புறம் ஒரு உடல் ரத்தம் சொட்ட சொட்ட தொங்கியபடி கிடந்தது.
இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் ரயில்கள் இயங்கி வருகின்றன.

தினமும் பல லட்சம் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய ஊர்கள் முதல் பெரு நகரங்கள் வரை ரயிலில் குறைந்த கட்டணத்தில் சொகுசாக பயணிக்க முடியும். இதனால் ரயிலுக்கான மவுசு மட்டும் தான் குறையவில்லை.
இது ஒருபுறம் இருந்தாலும் அவ்வப்போது ரயில் விபத்துகளும் நடந்து வருகின்றன. மேலும் ரயில் மோதியும் பலர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக தண்டவாளத்தை கடக்க முயலும்போது இத்தகைய உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது தெலுங்கானா மாநிலம் பிபிநகரில் இருந்த காட்கேசார் இடையே ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது பைலட் கீழே இறங்கினார். அப்போது அவர் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரயில் இன்ஜினின் முன்புறம் ஆண் ஒருவரின் உடல் ரத்தம் சொட்ட சொட்ட தொங்கியபடி கிடந்தது. அந்த உடலை பார்த்து திடுக்கிட்டார்.
இதுபற்றி உடனடியாக செகந்திராபாத் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் வந்து இன்ஜினின் முன்புறம் தொங்கிய உடலை கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது ரயில் மோதியதும், அப்போது அவரது உடல் இன்ஜின் முன்புறம் சிக்கி சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு தொங்கியபடி வந்ததும் தெரியவந்தது.
மேலும் இறந்த நபர் 65 வயது முதல் 70 வயதுக்குள் இருப்பார் என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் கூட அந்த நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications