அமைச்சரானார் முகமது அசாருதீன்.. தெலுங்கானாவில் காங்கிரஸ் கொடுத்த பதவி.. பாஜக கடும் விமர்சனம்
ஹைதராபாத்: தெலுங்கானாவின் புதிய அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று பதவியேற்று கொண்டார். முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் எம்எல்சியாக உள்ள நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததால் பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அசாருதீனுக்கு காங்கிரஸ் கட்சி ஏன் அமைச்சர் பதவியை அவசரஅவசரமாக வழங்கியது? பாஜக ஏன் கொந்தளிக்கிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ரேவந்த் ரெட்டியின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

புதிய அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பதவியேற்றார். ஆளுநர் ஜிஸ்னு தேவ் வர்மா அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமைச்சர்கள், முகமது அசாருதீன் குடும்பத்தினர் பங்கேற்றனர். முகமது அசாருதீன் அமைச்சரானதன் மூலமாக தெலுங்கானா அமைச்சர்களின் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. தெலுங்கானாவை பொறுத்தவரை மொத்தம் 18 பேர் அமைச்சராக பொறுப்பு வகிக்கலாம். தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன.
இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சேர்ந்தார். கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் முகமது அசாருதீன் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது எம்எல்சியாக அவர் உள்ள நிலையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அவருக்கு எந்த துறையும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. முகமது அசாருதீனுக்கு சிறுபான்மையினர் நலத்துறையுடன் சேர்த்து விளையாட்டு துறையும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் முகமது அசாருதீனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாஜக, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ய தொடங்கி உள்து. இதுதொடர்பாக பாஜக தலைவர்கள், ‛‛ஜூபிலி ஹில்ஸ் சட்டசபை தொகுதியில் கடந்த முறை முகமது அசாருதீன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெறுவதற்கான அசாருதீனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கை. தகுதி அடிப்படையில் அமைச்சர் பதவியை வழங்காமல் தேர்தலுக்காக காங்கிரஸ் அசாருதீனுக்கு அமைச்சர் பதவியை வழங்கி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது தெலுங்கானாவில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் சட்டசபை தொகுதியில் அசாருதீன் பிஆர்எஸ் கட்சி வேட்பாளரான மகந்தி கோபிநாத்திடம் 16,337 ஓட்டுகள் வித்தியாசத்தில் கடந்த 2023 சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். தற்போது எம்எல்ஏ மகந்தி கோபிநாத் காலமாகிவிட்டார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இஸ்லாமியர்களின் ஓட்டுகள் உள்ளது. இந்த ஓட்டுகள் கிடைத்தால் வேட்பளர் வெற்றி பெறுவார். இதனால் தான் இஸ்லாமியரான அசாருதீனை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் அமைச்சராகி உள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இதற்கு அசாருதீன் பதிலளித்துள்ளார். பதவியேற்புக்கு பிறகு முகமது அசாருதீன் கூறுகையில், ‛‛நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கட்சி மேலிடத்துக்கு நன்றி சொல்கிறேன். மக்களுக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் நன்றி சொல்கிறேன். நான் அமைச்சராகி இருப்பது ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவை இரண்டும் வெவ்வேறு மேட்டர்கள். யாரும் முடிச்சி போட வேண்டாம்.
எனக்கு எந்த பொறுப்பு வழங்கப்படுகிறதோ.. அதை உண்மையாகவும், நேர்மையாகவும் மேற்கொள்வேன். ஜி கிசான் ரெட்டி (பாஜக தலைவர்) என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. தேசப்பற்றுக்கான சான்றிதழை நான் யாரிடம் இருந்து பெற வேண்டிய தேவையில்லை'' என்று கூறினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications