தொழிலில் நஷ்டம்.. 3 வயது மகள் வாயில் குங்குமம், மஞ்சளை அடைத்து பரிகாரத்தால் பலி.. தந்தை கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் தொழில் நஷ்டத்தை சரி செய்ய தனது 3 வயது மகளை வைத்து தந்தை பரிகார பூஜை செய்த போது அந்த குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூர் மாவட்டம் பேராரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு இரு மகள் உள்ளனர். அதில் இளைய மகளுக்கு 3 வயதாகிறது.
வேணுகோபால் செங்கல் சூளை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த தொழில் நன்றாக அவருக்கு கை கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தையே வேணுகோபால் சந்தித்து வருகிறாராம்.

ஜோதிடம்
ஜோதிடம், பூஜை புனஸ்காரம், பரிகார பூஜையில் அதிக நம்பிக்கை கொண்டவர் வேணுகோபால். இதனால் தீய சக்திகளின் ஆதிக்கத்தால்தான் தனது தொழிலில் நஷ்டம் அடைந்ததாக வேணுகோபால் கருதினாராம். மேலும் சனி கிரகம் எப்போதுமே கெடுதலையே கொடுக்கும் என அவ்வப்போது வீட்டில் கூறுவாராம்.

தீயசக்தி
இந்த நிலையில் தீய சக்தியை விரட்டி தொழில் நஷ்டத்தை எப்படி சரிசெய்வது என யோசித்தாராம். இதையடுத்து தனது 3 வயது இளைய மகளை வைத்து ஒரு பரிகார பூஜை நடத்த முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டு தோட்டத்தில் பூஜை நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

3 வயது சிறுமி
3 வயது சிறுமியின் கைகளை கட்டி அவர் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றினார். பின்னர் அந்த சிறுமியின் வாயில் குங்குமம், மஞ்சளை கொண்டு அடைத்துள்ளார். இதனால் அந்த சிறுமி மூச்சு திணரலால் அவதியடைந்தார். இதை பார்த்து அச்சமடைந்த அவரது மூத்த மகள் வீட்டை விட்டு ஓடி போய் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர்
இதையடுத்து அவர்கள் ஓடோடி வந்து அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுமியின் நிலை மோசமடைந்ததால் அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேணுகோபால் கைது
இதையடுத்து தந்தை வேணுகோபால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் எந்த சாமியாரும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. இந்த பூஜையை சுமார் 2 மணி நேரம் செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
-
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications