IT ஊழியர்களை சைலன்ட்டாக தாக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்.. ஹைதராபாத்தில் 84% பேர் பாதிப்பு.. தப்பிப்பது எப்படி?
ஹைதராபாத்: ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது கல்லீரல் கொழுப்பு நோயால் (Fatty Liver Disease) அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் மட்டும் 84 சதவீத ஐடி ஊழியர்களுக்கு இந்த கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த கல்லீரல் கொழுப்பு நோய் என்பது என்ன? என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும்? நோயில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஐடி துறையில் பணியாற்றினால் கைநிறைய சம்பளம் கிடைக்கும். அதேபோல் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்ற பேச்சு நடைமுறையில் உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், உடல் பருமன் அதிகரித்தல், தூக்கமின்மை, கண் பார்வை மங்குதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வரலாம் என்று சொல்வது உண்டு.

இந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளது தான் Metabolic Dysfunction - Associated Fatty Liver Disease. இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் MAFLD என்பார்கள். தமிழில் ‛கல்லீரல் கொழுப்பு நோய்' என சொல்கிறார்கள்.
84 சதவீதம் பேருக்கு ‛கல்லீரல் கொழுப்பு' நோய்
இதுதொடர்பாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் சயின்டிஸ்ட் மற்றும் ஆசியன் இரைப்பை குடல் நோய் நிறுவனத்தின் (Asian Institute of Gastroenterology or AIG) கல்லீரல் நோய் சார்ந்த நிபுணர்கள் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். புரோபஷர் கல்யான்கர் மகாதேவ் மற்றும் புரோபஷர் அனிதா ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அதில் ஹைதராபாத்தில் பணியாற்றும் ஐடி ஊழியர்களில் 84 சதவீதம் பேருக்கு ‛கல்லீரல் கொழுப்பு' நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கடந்த 2023 ஜூலை மாதம் முதல் 2024 ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது. இந்தஆய்வின் முடிவுகள் Nature Scientific Reports-ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மொத்தம் 345 ஐடி ஊழியர்கள் எடுத்து கொள்ளப்பட்டனர். இதில் 294 பேர் (85.20 சதவீதம்) ஆண்கள் ஆவார்கள். 51 பேர் பெண்கள் (14.08 சதவீதம்) ஆவார்கள்.
காரணம் என்ன?
இவர்களில் 327 பேர் 30 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதோடு டிகிரி அல்லது பட்டமேற்டிப்பு படித்தவர்கள். இவர்கள் அனைவரும் 9 முதல் 18 ஆண்டுகள் பணி செய்பவர்கள். அதிம் 16 5 பேர் ஹைபிரிட் முறையில் பணியாற்றி வருகின்றனர். 55 பேர் வீட்டில் இருந்து பணியாற்றி வரகின்றனர். இவர்களில் 84.06 சதவீதம் பேருக்கு கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் ஐடி ஊழியர்களிடம் கடந்த முறை எடுக்கப்பட்ட ஆய்வின்போது 38.6 சதவீதம் பேருக்கு மட்டுமே கல்லீரல் கொழுப்பு நோய் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அது கிடுகிடுவென அதிகரித்து 84 சதவீதம் என்ற அளவுக்கு சென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அலுவலகங்களில் நீண்டநேரமாக அமர்ந்து பணியாற்றுவது தான் என்று சொல்லப்படுகிறது.
இதுதவிர உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வது, ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்வது, சரியான தூக்கம் இல்லாதது, மனஅழுத்தம், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் என பலவற்றை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் கொழுப்பு நோய் என்பது என்ன?
பொதுவாக கல்லீரலில் 5 சதவீதத்துக்கும் அதிகமாக கொழுப்பு சேரும்போது அதனை கல்லீரல் கொழுப்பு நோய் என்று டாக்டர்கள் சொல்கின்றனர். இது வெறும் கொழுப்பு அதிகரிப்பதால் மட்டும் ஏற்படுவது இல்லை. நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவில் உள்ள மாவுப்பொருட்கள் நம் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. இதில் எஞ்சும் மாவுச்சத்துகள் கிளைக்கோஜனாக மாறி கல்லீரலில் சேமிக்கப்படும்.
இந்த கிளைக்கோஜன் கல்லீரலில் தேங்கும் பட்சத்தில் கொழுப்பாக சேரும். இதனை உடனடியாக கல்லீரல் கொழுப்பு நோயை கண்டுபிடித்து அதில் இருந்து மீள வேண்டும். பெரும்பாலானவர்கள் தங்களின் கல்லீரல் கொழுப்பு நோய்க்கான காரணத்தை டாக்டர்களிடம் அறிந்து கொண்டு அதனை கைவிட்டாலே போதும். எளிதில் மீண்டு விடலாம்.
புற்றுநோய் கூட வரலாம்
ஆனால் நாள்பட்ட கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்து அதனை கண்டுக்கொள்ளாவிட்டால் கல்லீரல் செயலிழப்பு, சிர்கோசிஸ் (Cirrhosis) மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடும் பாதிப்புக்கு உள்ளாக்குவதோடு, அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்று விடும் என்றும் வார்னிங் செய்துள்ளனர். இதுதவிர ஐடி துறையில் உள்ளவர்கள் அவ்வப்போது இதுதொடர்பான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பில் தப்பிப்பது எப்படி?
இந்த கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீச்சல், சைக்கிளிங் உள்ளிட்டவற்றை பின்பற்றலாம். அலுவலகத்தில் அதிக நேரம் அமர்ந்து இருக்க கூடாது. உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது, உடல் எடையை குறைப்பது, கொழுப்பு இல்லாத உணவுகளை எடுத்து கொள்வது உள்ளிட்டவற்றால் ‛கல்லீரல் கொழுப்பு' நோயில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications