சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக்-தெலுங்கானா தெலுங்குதேசம் கட்சி மாஜி தலைவர் பிஆர்எஸ் கட்சிக்கு தாவினார்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில தெலுங்குதேசம் கட்சியின் முன்னாள் தலைவர் கசானி ஞானேஷ்வர் இன்று முதல்வர் கே.சந்திரசேரக ராவ் முன்னிலையில் பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.
ஆந்திரா மாநில அரசியல் கட்சியான தெலுங்குதேசம், தெலுங்கானாவில் செல்வாக்கு பெற முடியவில்லை. தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 14.5% வாக்குகளைப் பெற்று 15 இடங்களைக் கைப்பற்றியது தெலுங்கு தேசம் கட்சி. ஆனால் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெறும் 2 இடங்களில்தான் அக்கட்சியால் வெல்ல முடிந்தது. தெலுங்கு தேசம் கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 3.5% ஆகவும் வீழ்ந்தது. அன்று முதல் இன்று வரை தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சியால் எழவே முடியவில்லை.

இந்த நிலையில் தற்போதைய சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக இணைந்து போட்டியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் இருந்து வந்தது. ஆனால் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தெலுங்கானா தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிடவே செய்யாது என அறிவிக்கப்பட்டது. இதனால் தெலுங்கானா தெலுங்குதேசம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநில தலைவர் கசானி ஞானேஷ்வர் தமது பதவியை மட்டுமல்ல ஒட்டுமொத்த கட்சிக்கே குட்பை சொல்லிவிட்டார். அவரைப் போல தெலுங்குதேசம் கட்சியின் பலரும் விரக்தி அடைந்துவிட்டனர்.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் முன்னிலையில் கசானி ஞானேஷ்வர் இன்று பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தார். அவருக்கு பிஆர்எஸ் கட்சி துண்டை அணிவித்து அரவணைத்துக் கொண்டார் முதல்வர் சந்திரசேகர ராவ். மேலும் கசானி ஞானேஷ்வருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உரிய கவுரவத்தையும் எதிர்காலத்தையும் பிஆர்எஸ் கட்சி வழங்கும் எனவும் முதல்வர் சந்திரசேகர ராவ் உறுதியளித்தார்.
முன்னதாக தெலுங்குதேசம் கட்சியை போல ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவின் ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. அத்துடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாகவும் அறிவித்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும் கை கொடுக்காத நிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளா இந்த முடிவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications