தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!
மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
ஹைதராபாத்: தாலி கட்ட அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை! இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தில் கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப். இவர் ஒரு தொழில் அதிபரின் மகன்.. வசதியாக வாழ்ந்து வந்தவர்.. இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியரும்கூட!

சந்திப்புக்கும், அவரது சொந்தக்கார பெண்ணுக்கும் போன மாதம் நிச்சயதார்த்தம் செய்தார்கள்.நேற்று கல்யாணம் வைத்திருந்தார்கள். ஆனால் மாப்பிள்ளை டிரஸ் பண்ணிக் கொண்டு வரேன் என்று போனவர், அவர் ரூமை விட்டுவெளியே வரவே இல்லை... தாலி கட்ட அரை மணி நேரம்தான் இருப்பதால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ரூம் கதவை தட்டினர்.
ஆனால் திறக்கவே இல்லை.. இதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள். அப்போது, சந்திப் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை கண்டு உறவினர்கள் கதறி துடித்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட, அவர்களும் விரைந்து வந்து விசாரணையை நடத்தினர். அப்போது, சந்திப்பின் அம்மா ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தாத்தா , பாட்டிதான் சந்திப்பை வளர்த்து வந்துள்ளனர்.
இதில், தாத்தா கொஞ்ச நாளைக்கு முன்பு இறந்துவிட்டார். தாத்தா இறந்ததில் இருந்து சந்திப் சோகமாகவும், கடுமையான மன உளைச்சலிலும் இருந்துள்ளார் என்று தெரிகிறது. அதனால் தாத்தா பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் இப்படி தற்கொலை முடிவுக்கு வந்தாரா அல்லது வேறு யாருடனாவது காதல் வசப்பட்டு இருந்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
சந்திப்பின் உடலை கண்டு கல்யாணப் பெண் கதறி அழுதது குடும்பத்தாரை நிலைகுலைய செய்துவிட்டது. தாலி கட்ட அரை மணி நேரமே இருந்த நிலையில் மணமகன் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications