அதென்ன பச்சை கலர்ல? வாயடைத்துப்போன விஞ்ஞானிகள்! உலகத்தின் பிறப்பு குறித்து 'ஹின்ட்' கொடுத்த இந்தியா
தற்போது கிடைத்துள்ள பாறைகள் இந்த பூமியின் ஆரம்ப காலத்தை புரிந்துக்கொள்ள உதவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஹைதராபாத்: இந்த பூமி உருவாகி ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இது உருவான காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள ஆய்வாளர்கள் சில பழமையான பாறைகளை தெலங்கானாவில் கண்டெடுத்துள்ளனர்.
நமது சூரியன் உருவாக தொடங்கியபோது அதிலிருந்து பிரிந்து வந்த ஒரு பகுதிதான் பூமி. இது தொடக்கத்தில் சிறியதாக இருந்தாலும், அதிக எடைகொண்டிருப்பதால் விண்வெளியில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்த விண்கற்களை தன்பக்கம் ஈர்த்து உள் இழுத்துக்கொண்டது. இப்படியே தன்னை தாண்டி போகும் பொருட்களையெல்லாம் இழுத்து பிடித்து விழுங்கி கொண்டு ஏறத்தாழ உருண்டையான வடிவத்துடன் பூமி உருவானது.
இவ்வாறு பூமி உருவாக தொடங்கிய காலகட்டம் 'ஹேடியன்' என்று குறிப்பிடப்படுகிறது. 450 கோடி ஆண்டுகளிலிருந்து 400 கோடி ஆண்டு வரை உள்ள காலகட்டத்தைதான் ஹேடியன் என்று அழைப்பார்கள். இந்த காலத்தில் எந்த உயிரினமும் உருவாகவில்லை. அதன் பின்னர் 'ஆர்க்கியன்' யுகம் தொடங்கியது. இந்த காலகட்டத்தில்தான் உலகில் முதன் முதலாக உயிர்கள் தோன்றியது. இது 400 கோடி ஆண்டுகள் முதல் கடைசி 2,500 ஆண்டுகள் வரை நீண்டிருக்கிறது. நமக்கு இப்போது வரை இந்த 'ஆர்க்கியன்' காலம் பற்றிதான் தெரியும்.

ஆய்வு
'ஹேடியன்' காலம் பற்றி முழுமையாக தெரியாது. இன்னமும் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இந்த காலத்தை சேர்ந்த 'சிர்கான்'(zircon) எனும் அரிய கற்கள் ஹைதராபாத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள சித்ரல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவின் பிரசிடென்சி பல்கலைக்கழகம், ஹிரோஷிமா பல்கலைக்கழகம் மற்றும் புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தின் (NCESS) ஆய்வாளர்கள் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டிருந்தபோது இந்த கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 612 படிம கற்கள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன.

தெலங்கானாவில்
இதனை ஆய்வு செய்தபோது அதில் 6 கற்கள் 'ஹேடியன்' காலத்தை சேர்ந்த சிர்கான் படிமம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் உருவாக தொடங்கியபோது எப்படி இருந்தது? என்னென்ன தனிமங்கள், ரசாயனங்கள் இருந்தன? போன்றவற்றை நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும். இப்படியான கற்கள் கிடைப்பது மிகவும் அரிதானது. ஏனெனில் மேற்குறிப்பிட்டதைப் போல பூமி உருவான காலத்தில் தன்னை சுற்றியிருந்த விண்கற்களை இழுத்து தன்னுள் போட்டுக்கொண்டது. எனவே பழைய கற்கள் மீது புதிய கற்கள் மோதியதால் நம்மால் இந்த பழைய கற்களை பார்க்க முடியாமல் போய்விட்டது.

விலைமதிப்பற்றது
இதனை பார்க்க வேண்டும் எனில் சில நூறு கி.மீ வரை நாம் பூமிக்கு அடியில் செல்ல வேண்டும். ஆனால் அதிசயமாக சில இடங்களில் இக்கற்கள் பூமிக்கு மேற்பரப்பிலேயே காணப்படும். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இதே போன்ற ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது 440 கோடி ஆண்டுகள் பழமையானது. தற்போது தெலங்கானாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கற்கள் 400 கோடி ஆண்டுகள் பழமையானதாகும். அறிவியல் ஆய்வாளர்களுக்கு இந்த கற்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதே அளவுக்கு நகை வியாபாரிகளுக்கும் இக்கற்கள் மிகவும் விலை மதிக்க முடியாதவையாகும்.

பெருமை
ஏனெனில் வைரம் உருவாக 100 கோடியில் 300 கோடி கால தேவைப்படும். ஆனால் அதைவிட இந்த சிர்கான் கல் பழமையானது என்பதால் இதனை வாங்கவும் பெரும் பணக்காரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் பூமியின் இளம் காலகட்டம் இந்தியாவிலிருந்து கிடைத்த கல்லிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது நமக்கும் பெருமைதானே!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications