தெலுங்கானாவை புரட்டி எடுத்த வரலாறு காணாத மழை.. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு! அடித்துச் செல்லப்பட்ட பெண்!
ஹைதராபாத்: தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 65 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர பிரதேசம், தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை ஒட்டிய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கனமழை எதிரொலியாக இன்று அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிகபட்சமாக முலுகு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சித்யாலா மண்டலத்தின் ஜெய்சங்கர் பூபாலப்பள்ளியில் 61.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஹனம்கொண்டா, ஜங்கான், உள்ளிட்ட வாரங்கல் பகுதி முழுவதும் மழை மிகக் கடுமையாகப் பெய்துள்ளது. இந்த மாவட்டங்களில் 30 - 40 செ,மீ மழை பதிவாகியுள்ளது. பத்ராதி கொத்தகுடேம், கரீம்நகர் மற்றும் அடிலாபாத் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிப் பகுதியில் சிக்கிக் கொண்டனர். திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால், ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்ட பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே கொத்தகுடேம் மாவட்டம் முல்கலப்பள்ளி பகுதியில், கோதாவரி ஆற்றின் கிளை ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு தோட்ட வேலையில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் சிலர் கூட்டமாக ஆற்றைக் கடக்க முயன்றனர். அப்போது, 51 வயதான பெண் ஒருவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் இதுவரை மீட்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications