தொட்ட அனைத்திலும் தோல்வி! விடாமல் முயன்ற விவசாயி.. தக்காளியால் ஒரே மாதத்தில் கோடீஸ்வரனான கதை! செம
ஹைதராபாத்: பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத விவசாயி ஒருவர் தனது அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரே மாதத்தில் தக்காளி விவசாயத்தில் பல கோடி சம்பாதித்த அதிசயம் நடந்துள்ளது.
தக்காளி விலை கடந்த சில வாரங்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது. சில வாரங்களில் அது பல மங்கு அதிகரித்து கிலோ ரூ.100ஐ தொட்டுள்ளது. தக்காளி விலையால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அதேநேரம் மறுபுறம் உச்சம் தொட்ட தக்காளி விலையால் விவசாயிகள் செம மகிழ்ச்சியில் உள்ளனர். வெறும் சில வாரங்களில் தக்காளி விவசாயம் செய்தவர்கள் கோடிகள் வரை சம்பாதித்துள்ளனர்.

விவசாயி: அப்படி கல்வி படிப்பையே பாதியில் கைவிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட விவசாயி ஒருவர் எப்படி சில வாரங்களில் பல கோடியை அள்ளினார் என்பது குறித்து நாம் இப்போது பார்க்கலாம். தெலங்கானா மாநிலம் மேடக்கில் உள்ள கவுடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி மகிபால் ரெட்டி.. இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவரால் கல்வியைத் தொடர முடியாமல் போனது.
இதையடுத்து இவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாக இருந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நெல் சாகுபடிக்கு முயன்றுள்ளார். இருப்பினும் அதில் அவருக்கு மிகப் பெரிய அடி.. கடும் நஷ்டத்தை அவர் எதிர்கொண்டுள்ளார். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் இருந்துள்ளார். அதன் பிறகு இவருக்குத் தக்காளி விவசாயம் செய்யலாம் என்ற ஐடியா வந்துள்ளது.
பல கோடி வருமானம்: தக்காளி விவசாயம் செய்தால் ஓரளவுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என அவர் நம்பியுள்ளார். இருப்பினும், தக்காளி விலை இவரை கோடீஸ்வரராக மாற்றும் என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. சரியாக, இவர் தக்காளி விவசாயத்தில் இறங்கிய சில காலத்திலேயே அதன் விலை உச்சம் தொட ஆரம்பித்ததது. இதன் மூலம் கடந்த ஜூன் 15 முதல் ஒரே மாதத்தில் இவர் 1.8 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.
ஹைதராபாத்தில் தக்காளி தேவை அதிகரித்த நிலையில், அதை இவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆந்திராவில் இருந்து வரத்துக் குறைவாக இருக்கத் தக்காளி விலை படுவேகமாக உயரவே, அதை பக்காவாக பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே நெல் சாகுபடியில் அடிவாங்கியிருந்த இவர், தக்காளி விவசாயத்திற்கு வரும் போது, கவனமாகப் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தார். எட்டு ஏக்கரில் தக்காளியைப் பயிரிட்ட அவர், மோசமான வானிலையிலிருந்து பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கையை முன்னரே எடுத்திருந்தார்.
தக்காளி விலை உயர்ந்ததால், அவரது ஏ கிரேடு தக்காளி விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது.. அந்த பகுதியில் கொட்டிய மழையால் கணிசமான அளவுக்குத் தக்காளி வீணானது.. இருப்பினும், அவர் முன்கூட்டியே எடுத்த நடவடிக்கையால் பாதிப்புகளை அவரால் குறைக்க முடிந்தது. இதனால் கடந்த ஓரிரு வாரத்தில் மட்டும் அவருக்கு ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது. அவரிடம் இன்னும் 40% பயிர் இருக்கிறதாம்.

கை கொடுத்த அனுபவம்: முதலில் மகிபால் ரெட்டி தனது தனது 100 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார். இருப்பினும், அதில் பணம் சம்பாதிப்பது கடினம் என்பதை உணர்ந்த அவர், 40 ஏக்கரில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விவசாயத்தில் இறங்கியுள்ளார். தக்காளி விவசாயத்தைச் சரியாக பிளான் செய்து செய்தால் சரியாகச் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்த அவர், ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் வரை செலவு செய்து தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம் அவரது வருவாய் அதிகரித்துள்ளது.
அவரது கடின உழைப்பு அபரிமிதமான விளைச்சல் இந்தாண்டு இருந்துள்ளது. சரியாக விலையும் உச்சம் தொட அவருக்கு அற்புதமான வருமானம் கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த வருமானத்தை வைத்து அவர் மேலும் ஹைடெக்காக விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளார். தனது வயல்களில் உரம் தெளிக்க ஆளில்லா டிரோன்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.. செலவைக் குறைத்து விளைச்சலை அதிகரிக்க இப்படிப் பல திட்டங்களை வைத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications