பீஃப்.. ஓவைசி சொன்ன ஒரு வார்த்தை! பாஜக "பஜக்குன்னு" பிடிச்சுக்கிச்சே! தெலுங்கானாவையே உலுக்கும் மோதல்
ஹைதராபாத்: தெலுங்கானா லோக்சபா தேர்தலில் திடீரென பீஃப் விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் என்று வந்துவிட்டால் அதில் பாஜகவின் பிளானிங்கை அடித்துக்கொள்ளவே முடியாது. இல்லாத விஷயத்தை கூட திடீரென இழுத்து வந்து அதை தீவிரமாக பேசி பெரிதாக்கி அதை பிரச்சாரத்தின் மையமாக்குவது பாஜகவின் ஸ்டைல்.. உதாரணமாக தமிழ்நாட்டில் கச்சத்தீவு பிரச்சனை.

பல வருடமாக இருக்கும்.. பெரிதாக மக்கள் மத்தியில் பேசு பொருளாக இல்லாத கச்சத்தீவு பிரச்னையை திடீரென பாஜக எடுத்து வந்து அதை மையமாக வைத்து பிரச்சாரம் செய்தது. அது வெற்றிபெறுமா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். narrative set செய்வது என்று அரசியலில் சொல்வார்கள். அதில் பாஜக கொஞ்சம் வலிமையான கட்சிதான்.
அப்படித்தான் தற்போது தெலுங்கானா தேர்தலிலும் இந்து - முஸ்லீம் என்று நேரடியாக பாஜக narrative set செய்து வருகிறது. அதிலும் தெலுங்கானா லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஹைதராபாத் வேட்பாளர் கே.மாதவி லதா செய்யும் பிரச்சாரங்கள்தான் அங்கே தேர்தல் பேசுபொருளாக.. தேர்தலின் மையமாக மாறி உள்ளது.
பாஜக ஹைதராபாத் வேட்பாளர் கே.மாதவி லதா: சமீபத்தில் கூட பாஜகவின் ஹைதராபாத் வேட்பாளர் கே மாதவி லதா மசூதியை நோக்கி அம்பு எய்த சைகை காட்டியது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. அவர் இஸ்லாமியர்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி கடந்த வாரம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது. ஏப்ரல் 17 ஆம் தேதி ராம நவமி ஊர்வலத்தின் போது இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தின் மீது மாதவி லதா அம்பு எய்து சைகை செய்ததாகவும், சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-A (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்த வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கம்) ஏப்ரல் 20 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீவிரமாக இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசும் இவர் தற்போது ஓவைசிக்கு எதிராக களமிறங்கி உள்ளார்.
ஓவைசி சொன்ன வார்த்தை: ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பாக இங்கே ஓவைசி போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஓவைசி சொன்ன வார்த்தை ஒன்றை பிடித்து பாஜக மாதவி புகார் அளித்துள்ளார்.
ஓவைசி பிரச்சாரத்தின் போது கறிக்கடை பாய் ஒருவரை பார்த்து வாக்கு கேட்டார். அவர் கோழி, மாட்டுக்கறியை வெட்டிக்கொண்டு இருக்க .. வாக்கு கேட்டுவிட்டு வேலையை தொடருங்கள் என்பது போல.. வெட்டுங்க வெட்டுங்க என்று கூறினார்.
இதைத்தான் மாதவி தற்போது பிடித்துக்கொண்டு பிரச்சாரத்தின் போக்கையே மாற்றி உள்ளார். ஓவைசி மாடுகளை வெட்ட சொல்கிறார். மாட்டுக்கறி விற்க சொல்கிறார்.
இந்துக்களை புண்படுத்தும் விதமாக பீஃப் வெட்ட சொல்கிறார். இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார் என்று மாதவி பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளார். ஓவைசி சாதாரண சொன்ன வார்த்தையை மாதவி அப்படியே பிரச்சார டாப்பிக் ஆக மாற்றி தற்போது தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
ஓவைசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் நேரடியாக புகார் அளித்து உள்ளார். இந்த பிரச்சராம் முழுக்க சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் மூலம் மாதவி லைம் லைட்டிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications