8 குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் கருகி பலி.. ஹைதராபாத்தில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? சோகமான தகவல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் ஓல்டு சிட்டியில் உள்ள புகழ்பெற்ற சார்மினார் அருகே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இன்று காலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட மொத்தம் 17 பேர் உடல் கருகி இறந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த சோகமான தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஓல்டு சிட்டியில் புகழ்பெற்ற சார்மினார் உள்ளது. இது புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் இங்கு அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த சார்மினார் அருகே குல்ஜார் ஹவுஸ் என்ற இடம் உள்ளது. இதன் அருகே நிறைய நகைக்கடைகள் உள்ளன.

how-fire-broke-out-near-gulzar-house-in-hyderabad-and-17-killed-including-8-children-details-here

இந்த கடைகளின் சுவர்கள் அனைத்தும் ஒன்றொடொன்று இணைந்த படி இருக்கும். இடநெருக்கடி அதிகமான இடமாக இது உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் திடீரென்று அடுக்குமாடி கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த கட்டத்தின் தரைப்பகுதியில் கடைகள் உள்ள நிலையில் மேல்பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் தரைதளத்தில் உள்ள கடையில் தீப்பிடித்து உள்ளது. இந்த தீ மளமளவென வேகமாக பிற கட்டடங்களுக்கும் பரவி உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் 11 வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 17 தீயணைப்பு துறை அதிகாரிகள் 70 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குறுகலான இடம் என்பதால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து 17 பேரை காப்பாற்றினர். மாறாக 17 பேர் தீயில் சிக்கி இறந்தனர். இதில் 8 பேர் குழந்தைகள், 5 பெண்களும் அடங்குவர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்களின் பெயர்கள் பிரகலாத் (வயது 70), முன்னி (70), ராஜேந்தர் (65), சுமித்ரா (60), ஹம்யி (7), அபிசேக் (31), ஷீத்தல் (35) பிரியன்ஸ் (4), இராஜ் (2), அரூஷி (3), ரிஷப் (4), பிரதம் (1), அனுயான் (3), வர்ஷா (35), பங்கஜ் (36), ரஜ்னி (32), இட்டு (4) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி குறுகிய இடம் என்பதால் ஒரே நேரத்தில் அதிகமான மக்களால் வெளியேற முடியவில்லை. இதுதவிர பலரும் தூக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் தீவிபத்து ஏற்பட்டதை அவர்களால் உடனடியாக அறிய முடியவில்லை. அவர்கள் கண்விழிப்பதற்குள் வீடுகளை கரும்புகை, தீ சூழ்ந்துள்ளது. இதனால் அதிகமானவர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி சம்பவ இடத்துக்கு சென்றார். மீட்பு பணியை முடுக்கி விட்டார். இதுபற்றி கிஷண் ரெட்டி கூறுகையில், ‛‛தீவிபத்து என்பது முத்து (Pearl) விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கடைக்கு மேலே உள்ள கட்டங்களுக்கு தீ பரவி உள்ளது. இந்த விபத்துக்கு மின்கசிவு தான் காரணம். இதில் பலர் காயமடைந்துள்ளார்கள். நான் யாரையம் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் தீயணைப்பு வீரர்களிடம் போதிய உபகரணங்கள் இல்லை என்று இங்கிருந்தவர்கள் என்னிடம் கூறி உள்ளனர். மாநில அரசு தீயணைப்பு துறைக்கு உரிய நிதி ஒதுக்கி உபகரணங்கள் வழங்க வேண்டும். பிரதமர் மோடியுடன் பேசி மத்திய அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு பெற்று தருவேன் '' என்றார்.

இந்த தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், ‛‛தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களை அறிந்து ஆழ்ந்த வருத்தம் கொள்கிறேன். தங்களின் அன்புக்குரியவர்களை இந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இறந்தவ ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+