தென்னிந்தியாவில் பாஜக எத்தனை சீட்களில் வெல்லும்! வந்து விழுந்த கேள்வி.. ரேவந்த் ரெட்டி பளிச் பதில்
ஹைதராபாத்: தென்னிந்தியாவில் பாஜக மொத்தம் எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த கேள்விக்குத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நாளை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடக்கும் நிலையில், அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

மற்ற மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டியளித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தேர்தல் தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ரேவந்த் ரெட்டி: தென்னிந்தியாவில் மொத்தம் 130 லோக்சபா இடங்கள் இருக்கும் நிலையில், அதில் 15க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் வளர வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது. இதன் காரணமாகத் தென்னிந்தியாவுக்குப் பிரதமர் மோடியே நேரடியாகப் பல முறை விசிட் அடித்துள்ளார். கடந்த சில வாரங்களில் இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் பிரதமர் மோடி 10 முறைக்கு மேல் வந்து சென்றுள்ளார். இதனால் தென்னிந்தியாவில் பாஜக கணிசமான இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் சில முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டது.
எத்தனை இடங்கள்: அப்போது பேசிய அவர், "தென்னிந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 130 இடங்கள் உள்ளன... அதில் பாஜக அதிகபட்சமாக பாஜக 12-15 இடங்களில் மட்டுமே வெல்லப் போகிறது. மீதமுள்ள 115-120 இடங்களில் நிச்சயம் இந்தியா கூட்டணியே வெல்லும்" என்றார். ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராக இருந்தாலும் அவர் கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார். ஏனென்றால் தெலுங்கானாவில் மே 13ஆம் தேதி தான் தேர்தல் நடக்கிறது. ஆனால் கேரளாவில் முன்கூட்டியே ஏப்ரல் 26இல் தேர்தல் நடக்கிறது.
இதன் காரணமாகவே ரேவந்த் ரெட்டி கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். கேரளாவைப் பொறுத்தவரை பாஜக ஒரு லோக்சபா தொகுதியில் கூட வெற்றி பெற்றதில்லை.. கேரளாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 180 தொகுதிகளிலும் போட்டியிட்ட போதிலும், ஒரே ஒரு சீட்டில் மட்டுமே வென்றது.
கேரளா: இதனால் கேரளாவில் இருக்கும் 20 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும் என்ற ரேவந்த் ரெட்டி, இங்கே பாஜகவுக்கு இடமில்லை என்றும் இந்த முறை பாஜக டெபாசிட் கூடப் பெறப் போவது இல்லை என்றும் தெரிவித்தார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கேரளாவில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும் மட்டுமே பிரதான கட்சிகள் இருக்கும் நிலையில், அவர்கள் தேசியளவில் ஒரே கூட்டணியில் இருந்தாலும் மாநிலத்தில் தனித்தனியாகப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
அடுத்து தெலுங்கானா மாநிலம் குறித்துப் பேசிய ரேவந்த் ரெட்டி, "எங்கள் தெலுங்கானாவில் மொத்தம் 17 லோக்சபா சீட்கள் இருக்கும் நிலையில், அதில் குறைந்தது 14 இடங்களில் இந்தியா கூட்டணி தான் வெல்லும். அதில் சந்தேகமே வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.
வாய்ப்பே இல்லை: நாடு முழுக்க 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்து பாஜக செயல்பட்டு வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி, "2023 தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் கேசிஆர் எப்படி பிரச்சாரம் செய்தாரோ அதேபோலத் தான் இதுவும்.. கேசிஆர் 100 இடங்களில் வெல்வோம் எனக் கூறினார். ஆனால் அவரால் வெறும் 39 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேபோலத் தான் பாஜக இப்போது செய்கிறது. அவர்கள் மக்களைக் குழப்ப முயல்கிறார்கள். ஆனால், வாக்காளர்கள் பாஜகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications