ஏசி வெடிப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.. ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் தலாப் கட்டா பகுதியில் நடந்த ஏசி கம்ப்ரசர் வெடிப்பில் இரண்டு பேர் காயமடைந்தனர். நல்ல வேளையாக அவர்களுக்கு பெரிய பிரச்சனை இல்லை.. பொதுவாக கோடைக்காலத்தில் ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கும். ஏசி வெடிப்பு பெரும்பாலும் அதிகப்படியான வெப்பம், தவறான வயரிங் அல்லது மோசமான பராமரிப்பு காரணமாக ஏற்படுகிறது. ஏசி வெடிப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் தலாப் கட்டா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஏசி கம்ப்ரசர் வெடிப்பில் இரண்டு பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் உசைர் கான் மற்றும் சையத் அலி ஹுசைன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அஸ்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். ஏசி கம்ப்ரசர் வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோடைக்காலம் காரணமாக அதிகரித்து வரும் புழுக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் வீடுகளில் ஏசிக்களை 24 மணி நேரமும் பயன்படுத்துகிறார்கள். ஏசி இல்லாத வீடுகளில் ஏசி வாங்கி வருகிறார்கள். இன்றைக்கு வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏர் கண்டிஷனர்கள் (AC-கள்) ஒரு அத்தியாவசியமான சாதனமாக மாறிவிட்டது. இந்த சூழலில் ஏசி வெடித்து சிதறுவது பற்றிய தகவல்கள், ஏசி வைத்திருப்போரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
ஏசி வெடிப்பு பெரும்பாலும் அதிகப்படியான வெப்பம், தவறான வயரிங் அல்லது மோசமான பராமரிப்பு காரணமாக ஏற்படுகிறது. உங்கள் ஏசி பாதுகாப்பாக இருக்க சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஏசிக்கள் ஏன் வெடிக்கிறது. ஏசி வெடிப்புகளுக்குப் பின்னால் உள்ள பொதுவான காரணங்களை பார்ப்போம்.
ஏசி வெடிப்புகள் பொதுவாக தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருக்கும். இல்லாவிட்டால் முறையற்ற பயன்பாடு காரணமாக நிகழ்கின்றன. அதில் சில முக்கிய காரணங்கள் இங்கே:
அதிக வெப்பமூட்டும் கம்ப்ரசர்: ஒரு ஏசி தொடர்ந்து இடைவெளிகள் இல்லாமல் இயங்கினால், கம்ப்ரசர் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது.
தவறான வயரிங்: மோசமான வயரிங், தளர்வான இணைப்புகள் அல்லது ஷார்ட் சர்க்யூட்கள் தீப்பொறிகள் மற்றும் தீ ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏசியில் உள்ள கேஸ் கசிவு: பழைய அல்லது சேதமடைந்த குழாய்களில் இருந்து குளிர்பதன வாயு கசிவுகள் தீப்பிடித்து வெடிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
ஏசியின் மோசமான பராமரிப்பு: அழுக்கு வடிகட்டிகள் மற்றும் அடைபட்ட காற்றோட்டங்கள் ஏசியை கடினமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தலாம், இது ஏசி வேலை செய்யாமல் போகும் அபாயத்தை அதிகரிக்கும்.
வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள்: திடீர் மின்சாரம் அதிகரிப்பது உள் கூறுகளை சேதப்படுத்தி அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டைப்லைசர் இல்லால் ஏசியை இயக்குவது ஏசி பழுதாக வாய்ப்பு உள்ளது.
ஏசி வெடிப்புகளைத் தடுக்க புத்திசாலித்தனமான வழிகள்:
உங்கள் ஏசியைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் வைத்திருக்க, கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றலாம்.
வழக்கமான சர்வீசிங் நிச்சயம் அவசியம்: எரிவாயு கசிவுகள், வயரிங் சிக்கல்கள் மற்றும் அடைபட்ட வடிகட்டிகள் ஆகியவற்றைச் சரிபார்க்க உங்கள் ஏசியை வருடத்திற்கு இரண்டு முறையாவது தொழில் முறையாக சர்வீஸ் செய்யுங்கள். அதாவது ஏசி மெக்கானிக்கை வருடம் இரண்டு முறை அழைத்து முறையாக சர்வீஸ் செய்ய வேண்டும்.
ஏசியை ஓவர்லோட் செய்வதைத் தவிர்க்கவும்: ஏசியை நீண்ட நேரம் தொடர்ந்து இயக்க வேண்டாம். அதிக வெப்பமடைவதைத் தடுக்க அதற்கு ஒரு இடைவெளி நிச்சயம் கொடுக்க வேண்டும்.
மின்னழுத்தம் இல்லாத நிலை வேண்டும்: மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் கம்ப்ரசரை சேதப்படுத்தும். மின்சார விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் உங்கள் ஏசியைப் பாதுகாக்கவும் ஒரு நல்ல ஸ்டைப்லைசர் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியைச் சுற்றியுள்ள பகுதியை தெளிவாக வைத்திருங்கள்: வெளிப்புற பகுதி சரியான காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள். தூசி, இலைகள் மற்றும் எரியக்கூடிய பொருட்கள் அடையாமல் அதனை பராமரிக்க வேண்டும்.
எரிவாயு கசிவுகளை தவறாமல் சரிபார்க்க வேண்டும்: ஒரு விசித்திரமான வாசனையை நீங்கள் கவனித்தால் அல்லது ஏசி சரியாக குளிர்விக்கவில்லை என்றால், அதை அணைத்து உடனடியாக ஏசி மெக்கானிக்கை அழைக்க வேண்டும்.
சரியான வயரிங் மற்றும் பிளக் பாயிண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்: மலிவான விலையில் கிடைக்கும் வயர்களை ஏசிக்கு வாங்கக்கூடாது, சரியான உயர்தரமான வயரிங் இருக்க வேண்டும். உங்கள் ஏசிக்கு எப்போதும் ஒரு பிரத்யேக பவர் சாக்கெட்டைப் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் ஏசி எச்சரிக்கும் வகையில் அறிகுறிகளைக் காட்டினால் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகளை பார்ப்போம்.
ஏசியை அணைத்து உடனடியாக அதை அவிழ்த்து விடுங்கள்.
புகை இருந்தால் யூனிட்டின் மீது தண்ணீரை ஊற்ற வேண்டாம்.
அந்த இடத்தை உடனே காலி செய்துவிட்டு ஒரு ஏசி மெக்கானிக்கை அழையுங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications