17 நிமிடம் தாமதமான திரைப்படம்.. வழக்கறிஞர் செய்த சம்பவம்.. பிவிஆர் சினிமாஸ்க்கு ரூ.75,000 ‘ஃபைன்’
ஹைதராபாத்: சொன்ன நேரத்துக்கு திரைப்படத்தை திரையிடாமல் தொடர்ந்து 17 நிமிடங்கள் வரை விளம்பரங்களை திரையிட்ட பிவிஆர் திரையரங்கத்துக்கு எதிராக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் ரூ.75 ஆயிரம் இழப்பீடாக வழங்க அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹைதரபாத்தில் வசித்து வரும் வழக்கறிஞர் ஒருவரும், இன்னொருவரும் 2 டிக்கெட் எடுத்து பிவிஆர் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். திரைப்படம் இரவு 10.35 மணிக்கு திரையிடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

வழக்கறிஞரும், இன்னொருவரும் சீக்கிரமாக தியேட்டருக்கு சென்றனர். மணி இரவு 10.35 மணி ஆனது. ஆனால் திரைப்படம் திரையிடப்படவில்லை. தொடர்ந்து விளம்பரங்கள் தான் திரையிடப்பட்டது.
சொன்னத நேரத்தை விட 17 நிமிடங்கள் கழித்து தாமதமாக தான் தியேட்டரில் சினிமா திரையிடப்பட்டது. இதனால் சினிமா முடிவதற்கும் நேரம் அதிகமானது. அதுமட்டுமின்றி இரவில் அவர் வகுத்து வைத்திருந்த திட்டத்தை செயல்படுத்தாமல் போனதோடு, திட்டமிட்டதை விட ஒரு மணிநேரம் தாமதமாக அதிகாலை 3 மணிக்கு தான் வழக்கறிஞர் வீட்டிற்கு சென்றார்.
இதனால் அதிருப்தியான வழக்கறிஞர் ஹைதரபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் பிவிஆர் சினிமாஸ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், '' சென்ன நேரத்தை விட 17 நிமிடங்கள் தாமதமாக திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த 17 நிமிடங்கள் விளம்பரம் திரையிடப்பட்டது. இதனால் வீட்டிற்கு தாமதமாக சென்றேன். மனஉளைச்சல் ஏற்பட்டது. இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதற்கு பிவிஆர் சினிமாஸ் எதிர்ப்பு தெரிவித்தது. பிவிஆர் சினிமாஸ் சார்பில், ''சுதந்திரமாக தொழில் செய்வதற்கான உரிமையை அரசியலமைப்பின் பிரிவு 19(1)(ஜி) உறுதி செய்கிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றமும் முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது. தியேட்டர்கள் தனியார் சொத்துகள். இதனால் அதன் செயல்பாட்டு விதிமுறைகளை உரிமையாளர்களை தீர்மானிக்கலாம்'' என்று வாதம் வைக்கப்பட்டது.
அதற்கு நுகர்வோர் நீதிமன்றம் ''தியேட்டர் தனி சொத்தாக வைத்து உரிமையாளர்கள் அதன் செயல்பாட்டை தீர்மானிக்கலாம். ஆனால் அந்த செயல் பொதுநலனை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்'' என்று கூறிய நுகர்வோர் நீதிமன்றம் இழப்பீடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டது.
அதன்படி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவிற்காக ரூ.5 ஆயிரம் மற்றும் தண்டனைக்குரிய இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த ரூ.50 ஆயிரத்தை மாவட்ட நுகர்வோர் நல நிதியத்திற்கு செலுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications
