Gay டேட்டிங் ஆப்.. போதை மருந்து கலந்த பீர்! பலரிடம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல் சிக்கியது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு என இருக்கும் டேட்டிங் செயலி மூலம் ஆண்களுடன் பழகி, அவர்களுக்கு போதை பொருள் கலந்த மதுவை கொடுத்து, தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். டாக்டர், கல்லூரி மாணவர்கள் என 5 பேர் இந்த கும்பலில் இருந்தது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

இப்போது இளசுகள் மத்தியில் டேட்டிங் செயலிகள் ரொம்பவே பிரபலமாகி வருகிறது. டேட்டிங் செயலிகளிலும் கூட பல்வேறு வகைகள் உள்ளன. அப்படி தான் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு என்றும் கூட தனியாக ஒரு டேட்டிங் செயலி உள்ளன. அப்படி தான் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு என்றும் கூட தனியாக ஒரு டேட்டிங் செயலி இருக்கிறது.

Hyderabad gay dating app scam

டேட்டிங் செயலி

இந்த டேட்டிங் செயலியில் ஆண்களிடம் பேசி பழகி ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. தெலங்கானாவின் மால்காஜ்கிரி, சைபராபாத், ஹைதராபாத் காவல் ஆணையரக பகுதிகள் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் என 14 இடங்களில் நடந்த கொள்ள சம்பவங்களுக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 408 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ரெட்டிகாரி தினேஷ் குமார் ரெட்டி (32), தேஜாவத் சந்தோஷ் (25), முகமது ஆரிஃப் (24), பனோத்து வித்யா சாகர் (21), பனோத்து கார்த்திக் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபர் சந்து என தெரியவந்துள்ளது. அவரை தேடும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

என்ன நடந்தது

அந்த செயலியில் இந்த கும்பல் போலியான புரொஃபைல்களை உருவாக்கி ஆண்களுடன் பழகியதாக கூறப்படுகிறது. சாட் மற்றும் வீடியோ கால் மூலம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களின் வாழ்க்கை முறை, மது அருந்தும் பழக்கம், தங்க நகைகள், வீட்டில் தனியாக வசிக்கிறார்களா உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். இதையடுத்து நேரில் சந்திக்க வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். அப்போது பீர் பாட்டில்களையும் எடுத்து சென்றுள்ளனர். யாருக்கும் தெரியாமல் அதில் போதை பொருட்களை கலந்து கொடுத்துள்ளனர்.

போதை மருந்து

இது குறித்து காவல் ஆணையர் சுமதி கூறுகையில், "ஒருவர் பாதிக்கப்பட்டவரின் கவனத்தைத் திசைதிருப்பும்போது, மற்றொருவர் மதுவில் போதை பொருளை கலந்துவிடுவார். அதை குடித்தவர்கள் மயக்கமடைந்ததும், அவர்களது தங்க செயின்கள், மோதிரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர்" என்றார்.

சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் தங்க நகைகள் இல்லாதபோது, அவர்களை ரகசியமாக வீடியோ எடுத்துவிட்டு அதை காட்டியும் மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அளித்த புகார்கள் மூலம் இந்த கும்பலின் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நடத்தப்பட்ட அதிரடி ஆபரேஷனில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை தீவிரம்

தற்போது கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்கள், டேட்டிங் செயலியில் அவர்கள் பயன்படுத்திய புரொஃபைல்கள், அதில் உள்ள சாட்கள், வீடியோ கால் ஹிஸ்டரி, இருப்பிட தகவல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆன்லைனில் பழகும் நபர்களிடம் வீட்டு முகவரியை பகிர வேண்டாம் என்றும் முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். யாரேனும் மிரட்டல் விடுத்தால் அதை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் போலீசாரிடம் புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+