Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வழுக்கை தலைகள்'.. ஹைதராபாத்தில் 6 ஆயிரம் பேரை 'மொட்டை' அடித்த கும்பல்.. ரூ.78 லட்சம் லாபம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தியும் சந்தானமும், வீடு வீடாக சென்று மொட்டை போட்டு கல்லா கட்டுவார்கள். அதே தான். ஆனால் சற்று வித்தியாசமாக யோசித்து, வழுக்கையில் முடிவளரும் என கூறி 6 ஆயிரம் பேர் தலையை மொட்டை போட்டிருக்கிறது ஒரு கும்பல். மூலிகை எண்ணெய் என்று ஒரு எண்ணெய்யை தடவி விட்டு, ரூ.78 லட்சம் பணத்துடன் எஸ்கேப் ஆகி உள்ளது. வழுக்கை தலையில் முடிவு வளரும் என்று சதுரங்க வேட்டை படம் பாணியில் நடந்த இந்த மோசடி பற்றி பார்ப்போம்.

ஒரு மனிதனுக்க தலைமுடி தான் இன்றைக்கு தலையெழுத்தே தீர்மானிக்கிறது. வழுக்கை தலையுடன் உள்ள ஆண்களை விட வழுக்கை இல்லாத ஆண்களையே திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புகிறார்கள். அதேபோல் இளம் வயதிலேயே வழுக்கை விழுந்த பலர், எப்படியாவது வழுக்கையை மறைக்க போராடுகிறார்கள். இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்து வருகிறார்கள். குறிப்பாக இயற்கையாக முடி வளர வேண்டும் என்பதற்காக சிகிச்சை பெறுவதற்காக பல எண்ணெய்களை வாங்கி தேய்க்கிறார்கள்.

Hyderabad hair treatment How did the Delhi gang defraud 6 000 people of Rs 78 lakh

மக்களை ஏமாற்றுகிறார்கள்

வழுக்கை தலையில் முடிவளரும் என்றும், முடி உதரும் பிரச்சனைக்கு இந்த மூலிகை எண்ணெய் தீர்வு என்றும் கவர்ச்சி வாக்குறுதிகளை கூறி, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிறுவனங்கள் காட்டில் தான் தற்போது அடைமழை பெய்து வருகிறது. பிரபல நிறுவனங்களே வழுக்கை தலை முடி பிரச்சனையில் பண மழையில் நனைகின்றன.

சதுரங்க வேட்டை பாணி

ஆனால் அது காஸ்ட்லி ட்ரீட்மெண்ட் என்பதால், எண்ணெய் வாங்கி தேய்த்து வருகிறார்கள் பலர். இதனை சாதகமாக்கிக் கொண்டு, நாங்கள் தரும் எண்ணெயை தலையில் தடவினால் வழுக்கை தலையில் முடி வளரும் என்று ஆசைவார்த்தை கூறி பண மோசடி செய்கிறார்கள். அப்படித்தான் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏமாந்துள்ளனர்.


6000 பேர் திரண்டனர்

ஹைதராபாத்தில் உள்ள பழைய நகரத்தில் குலிகுதுப் சாகி என்ற மைதானத்தில் வழுக்கை தலையில் முடி வளர்க்கும் எண்ணெய் விற்பனை செய்யப்பட உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் வீடு, வீடாக துண்டுபிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை பார்த்ததும் ஆண்கள், பெண்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டுள்ளார்கள்.

முகாம்கள் அமைப்பு

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த இந்த முகாமிற்காக டெல்லியை சேர்ந்த ஒரு கும்பல் ஹைதராபாத் வந்துள்ளார்கள்.. முகாமிற்கு வந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. தலையில் மூலிகை எண்ணெய் தடவ வேண்டும் என்றால் அனைவரும் மொட்டை அடித்திருக்க வேண்டும் என்று டெல்லி கும்பல் கூறியுள்ளது.

ஒரு மொட்டைக்கு 1300 ரூபாய்

அதை ஏற்றுக்கொண்டு அனைவரும் மொட்டை அடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் பதிவு கட்டணமாக ரூ.700-ம், எண்ணெய்க்காக ரூ.600-ம் என தலா ரூ.1,300 வசூல் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் சிகிச்சைக்காக வந்தவர்களின் தலையில் மூலிகை எண்ணெய் என்று கூறி ஒரு எண்ணெய்யை தடவியுள்ளனர்.

78 லட்சம் பணம்

மேலும் குறிப்பிடட மூலிகை எண்ணெயை கொடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை என தொடர்ந்து 3 மாதங்களுக்கு தடவி வந்தால் அடர்த்தியான முடி வளரும் என உத்தரவாதமும் அளித்திருக்கிறார்கள். ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து எண்ணெய்யை வாங்கி சென்றனர். இதன் மூலம் ரூ.78 லட்சத்துக்கு மேல் பணம் வசூலான நிலையில், மாலையில் டெல்லி கும்பல் கடையை சாத்திக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து விமானம் ஏறி டெல்லிக்கு தப்பி சென்று விட்டது.

ஏற்கனவே சம்பவம்

இதே கும்பல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானாவில் உள்ள உப்பலில் பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றியிருக்கிறது. இதனிடையே முடி வளராத நிலையில் மோசடி கும்பல் என்பது மக்களுக்கு தெரியவந்தது. இதுபற்றி புகாரின் பேரில் டெல்லி கும்பலை ஹைதராபாத் போலீசார் தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+