ஹைதராபாத் ஐடி பெண்.. அம்மன் சிலையுடன் நள்ளிரவில் நிர்வாண நடமாட்டம்.. 30 நிமிடங்களில் என்ன நடந்தது?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 25 வயதுடைய தேஜஸ்வினி என்ற இளம் பெண், நள்ளிரவில் அம்மன் சிலையுடன் நிர்வாணமாக ஓடி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.. இதைக்கேட்டு ஒட்டுமொத்த மாநிலமே ஆடிப்போய் கிடக்கிறது.. தேஜஸ்வினி ஏன் இப்படி நடந்து கொண்டார்? அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.. இது தொடர்பான விசாரணையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வினி.. பெங்களூரில் உள்ள ஒரு லீடிங் ஐடி கம்பெனி ஒன்றில், சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார்.. ஐடி கம்பெனி என்பதால், இவருக்கு நிறைய பணிச்சுமை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் 25 வயது பெண்
அதன்பின்பும்கூட, அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், தூக்கமின்மை, கெட்ட கெட்ட கனவுகள், கடுமையான பய உணர்வுகளால் அவதிப்பட்டு வந்துள்ளார் தேஜஸ்வினி.. ஒருகட்டத்தில் இந்த பிரச்சனைகளுக்காக மனநல சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாகவே தன்னுடைய அம்மாவுடன் ஹைதராபாத்தின் மேடிபள்ளி, பீர்சாதிகுடா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல், அம்மாவும், மகளும் இரவு சாப்பிட்டுவிட்டு, தூங்க சென்றிருக்கிறார்கள்.. நள்ளிரவு சுமார் 2.30 மணிக்கு திடீரென கண்விழித்த தேஜஸ்வினி, வெளியில் செல்ல நினைத்தார்.. ஆனால், தான் வெளியில் செல்வதை, அம்மா தடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அம்மா உறங்கிக் கொண்டிருந்த ரூமின் கதவை வெளிப்புறமாகப் பூட்டி விட்டார்.
பிறகு தன்னுடைய ஆடைகள் அனைத்தையும் களைந்துவிட்டு, கையில் ஒரு புடவையை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த காட்சி தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது.
நிர்வாணமாக நடமாடிய ஐடி பெண்
அதிகாலை 2.35 மணிக்கு தேஜஸ்வினி நிர்வாண கோலத்தில் காலனி தெருக்களில் ஓடியிருக்கிறார்.. 2:45 மணியளவில் அங்குள்ள உள்ளூர் பீரப்பா (Beerappa) கோயிலுக்குள் நுழைந்த தேஜஸ்வினி, அங்கிருந்த அம்மன் சிலையை தனது கைகளில் எடுத்துக்கொண்டார். சரியாக 3.00 மணிக்கு அந்தச் சிலையுடன் ஓடி சென்று, அருகில் இருந்த கோயில் குளத்தில் குதித்துவிட்டார்.. அப்படியே குளத்திலேயே தேஜஸ்வினி உயிர் மெல்ல மெல்ல அடங்கிவிட்டது.
மறுநாள் காலையில் எழுந்த தேஜஸ்வினியின் அம்மா, கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து கதவை திறந்து விட்டுள்ளனர்.. மகளை காணவில்லை என்று தேடியபோதுதான், கோயில் குளத்தில் தேஜஸ்வினியின் உடல் மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோயில் குளத்தில் அம்மன் சிலை எங்கே
இதுகுறித்து உடனே மேடிபள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஹைட்ரா (HYDRAA) மற்றும் பேரிடர் மீட்புப் படை (DRF) குழுவினரின் உதவியுடன் பெண்ணின் உடலை மீட்டனர். போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அவரது உடல் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், தேஜஸ்வினி கையில் எடுத்துச் சென்ற அந்த அம்மன் சிலை குளத்தில் எங்குள்ளது என்று தெரியவில்லை. இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக அச்சிலை கருதப்படுவதால், குளத்திற்குள் இறங்கி சிலையைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
தேஜஸ்வினியின் அம்மா தந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளில் தேஜஸ்வினி நடமாட்ட காட்சிகளின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் வெளிநபர்களின் தலையீடோ அல்லது சந்தேகத்திற்கிடமான போராட்டங்களோ நடக்கவில்லை என்பதும், கடுமையான மன உளைச்சலின் காரணமாக ஏற்பட்ட தற்கொலை என்பதும் முதற்கட்டமாக உறுதியாகியுள்ளது.
இருந்தாலும், காணாமல் போன அம்மன் சிலை மீட்கப்பட்டு, இறுதி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே இந்த நள்ளிரவு விபரீதத்தின் முழுமையான உண்மை வெளிவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
