மெட்ரோவில் சத்தமின்றி பறந்த இதயம்.. 25 நிமிடத்தில் காப்பாற்றப்பட்ட உயிர்.. குவியும் பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மெட்ரோவில் பொதுவாக மக்கள் பயணிப்பார்கள். ஆனால், ஒருவரை காப்பாற்ற இதயமும் நுரையீரலும் கூட பயணித்துள்ளது. அதாவது டிராபிக் நெரிசலை சமாளிக்க உறுப்பு மாற்று சிகிச்சைக்கான இதயமும் நுரையீரலும் ஹைதராபாத் மெட்ரோவில் சென்றுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

பெங்களூர் என்றாலே அங்கு டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பெங்களூருக்கு இணையாக கிட்டத்தட்ட தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திலும் டிராபிக் அதிகரித்தே வருகிறது. இதனால் சாலை மார்க்கமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது பெரிய சவாலாகவே இருக்கிறது.

Hyderabad metro Hyderabad metro

ஹைதராபாத் மெட்ரோ

இந்த ஹைதராபாத்தில் தான் இப்போது யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்த முறை மெட்ரோ ரயில் பல நூறு பயணிகளை மட்டுமின்றி, ஒரு மனித உயிரையும் காப்பாற்றி இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலை வெறும் 25 நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி இருந்த நிலையில், அதற்கு ஹைதராபாத் மெட்ரோ உதவியிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஹைதராபாத் மெட்ரோ எந்தளவுக்கு கை கொடுத்து இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

திட்டம் என்ன

மிகவும் நுட்பமான இந்த நடவடிக்கையை மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் கச்சிபௌலியில் உள்ள கேர் ஹாஸ்பிட்டல்ஸில் இருந்து இதயம் மற்றும் நுரையீரல் தானமாக பெறப்பட்டது. அது செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஹாஸ்பிட்டலுக்கு அவசரமாக எடுத்து செல்ல வேண்டி இருந்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாக இருப்பதால், சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

பக்கா பிளான்

இதற்காக ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் இரு மருத்துவமனை நிர்வாகம் இணைந்து பக்காவான திட்டத்தை உருவாக்கினார்கள். உறுப்பு பாதுகாப்பு பெட்டியுடன் மருத்துவ குழுவினர் ராய்துர்க் மெட்ரோ நிலையத்தில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். ராய்துர்க் முதல் ரசூல்புரா வரை மொத்தம் 14 கிலோமீட்டர் தூரம் மெட்ரோவில் இந்த இதயமும் நுரையீரலும் பயணித்துள்ளது. 13 மெட்ரோ நிலையங்களை கடந்து வெறும் 25 நிமிடங்களில் இரு உறுப்புகளும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. காலை 11.40 மணிக்கு தொடங்கி இந்த பயணம் மதியம் 12.05 மணிக்கு நிறைவடைந்தது.

மெட்ரோ நிலையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் எந்தவொரு தாமதமும் இல்லாமல்.. உறுப்புகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றடைந்தன. இதனால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்களால் சரியாக செய்ய முடிந்தது.

ஏன் முக்கியம்

இதயம் மற்றும் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்காக எடுத்து செல்லும்போது, நேரத்தை மிச்சப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அதிலும் குறிப்பாக இதயத்தை உடனடியாக நோடாளிக்கு பொருத்திவிட வேண்டும். உடலிலிருந்து பிரித்த சில மணி நேரங்களுக்குள் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தாக வேண்டும். இதுபோன்ற சூழலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ போன்றவை உயிர் காக்கும் முக்கிய கருவியாக மாறி வருகின்றன.

இதற்கு முன்பு இந்தியாவின் பல நகரங்களில் கிரீன் காரிடார் அமைத்து ஆம்புலன்ஸ் மூலம் உறுப்புகள் எடுத்து செல்லப்பட்டன. இருப்பினும், டிராபிக் நெரிசலால் அதுவும் கூட தாமதமாகி வந்த நிலையில், இப்போது பலரும் மெட்ரோ அல்லது ரயில்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+