நீட் வேண்டாம்.. தமிழகத்தை போலவே மற்றொரு மாநிலத்தில் எழுந்த குரல்! போராட்டம் தொடரும் என அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நாடு முழுக்க கடந்த ஒரு மாதமாக நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்தது அனைவருக்கும் தெரியும். தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து கரப்பான் பூச்சி கட்சியினர் நீட் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருப்பினும், வேறு சில அமைப்புகள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளன. அதில் முக்கியமாக ஹைதராபாத்திலும் தமிழகத்தை போலவே நீட் தேர்வை முழுமையாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஹைதராபாத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகள் சனிக்கிழமை ஒற்றுமை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு எதிர்ப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இந்த ராஜினாமாவை மாணவர்கள் வரவேற்றனர்.

Hyderabad NEET Protests Hyderabad NEET Protests

நீட் போராட்டம்

இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஹூசைன் சாஹர் பகுதியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தின. அதே நேரத்தில், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்த பேரணிகளை நடத்தி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த போராட்டங்களில் ஸ்டூடன்ட்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா ஸ்டூடன்ட்ஸ் பெடரேஷன், தேசிய மாணவர் சங்கம், புரோகிரசிவ் டெமோக்ரடிக் ஸ்டூடன்ட்ஸ் யூனியன் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வே வேண்டாம்

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா முக்கிய வெற்றியாக இருந்தாலும், இதனுடன் போராட்டம் முடிவுக்கு வராது என்று மாணவர் அமைப்புகள் தெளிவுபடுத்தின. தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி தேவை இருக்கும். அதற்கேற்ப நுழைவுத் தேர்வுகளை நடத்தும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும். தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

மாணவர் அமைப்பினர்

நீட் தேர்வு முறைகேடு மட்டுமல்லாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளை அவர்கள் விமர்சித்தனர். கேள்வித்தாள்கள் முன்கூட்டியே லீக் ஆவது தொடர்கதையாக இருப்பதாகவும் இது மிக பெரிய ஒரு நிர்வாக தோல்வியை வெளிப்படுத்துவதாக மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டின. மேலும், டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் அடக்குமுறையையும் அவர்கள் கடுமையாக கண்டித்தனர். போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மத்திய அரசு

ஸ்டூடன்ட்ஸ் ஆர்கனைசேஷன் ஆஃப் இந்தியா தலைவர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "ஒரே ஒரு அமைச்சரின் ராஜினாமா மட்டுமே போதுமானதல்ல.. கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்" என தெரிவித்தார். நீட் மற்றும் பிற தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், தேர்வு முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும், தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை நாடு முழுவதும் பல மாணவர் அமைப்புகள் வரவேற்று வரும் நிலையில், கல்வி அமைப்பில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றே மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+